April Bank Holidays: வங்கி தொடர்பான பணிகள் நிலுவையில் இருந்தால், அவற்றை இன்றே முடித்துக்கொள்ளுங்கள். தாமதித்தால், உங்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடும். ஏனெனில் அடுத்து வரும் 10 நாட்களில், பல நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9 நாட்களுக்கு வங்கிகளில் பணிகள் நடைபெறாது. இருப்பினும், இந்த விடுமுறைகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் (RBI) பட்டியலில் பல விடுமுறைகள் உள்ளன. பின்வரும் பட்டியலில் எந்தெந்த நாட்களில் ரிசர்வ் வங்கியின் விடுமுறைகள் உள்ளன என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை அதற்கேற்ப திட்டமிட முடியும். 


இந்த மாதம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடியிருக்கும்
இந்த மாதத்தில் வங்கிகளுக்கு (Banks) அதிக விடுமுறைகள் உள்ளன. வங்கிகளுக்கு இந்த மாதத்தில் சுமார் 15 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இவற்றில் 6 விடுமுறைகள் அடுத்த 10 நாட்களில் வந்து விடுகின்றன. ஏப்ரல் 21 க்குப் பிறகு, ஏப்ரல் 24 அன்று நான்காவது சனிக்கிழமை, ஏப்ரல் 25 அன்று வார விடுமுறை நாளாவதால் அந்த நாட்களில் வங்கிகள் பணிபுரியாது. எனினும், அனைத்து மாநிலங்களிலும் 15 நாள் விடுமுறை இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், சில பண்டிகைகள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. 


ALSO READ: டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துகிறீர்களா? இந்த விதிகள் மாறவுள்ளன!!


அடுத்த 10 நாட்கள் வங்கிகளின் விடுமுறை பட்டியலை இங்கே காணலாம்: 


ஏப்ரல் 13: செவ்வாய்க்கிழமை - உகாதி பண்டிகை, தெலுங்கு வருடப் பிறப்பு, போஹாக் பிஹு, குடி பட்வா, பைசாகி, சைரோபா, நவராத்திரியின் முதல் நாள் (பேலாபூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகரில் விடுமுறை) 
ஏப்ரல் 14: புதன்கிழமை - தமிழ் புத்தாண்டு, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி, விஷு, பிஜு பண்டிகை, செய்ராவோபா, போஹாக் பிஹு (அய்சோல், போபால், சண்டிகர், டெல்லி, ராய்புர், ஷிலாங், சிம்லாவில் வங்கிகள் திறந்திருக்கும்).
ஏப்ரல் 15: வியாழன் - இமாச்சல தினம், போஹாக் பிஹு, பெங்காலி புத்தாண்டு, சர்ஹுல் (அகர்தலா, குவஹாத்தி, கொல்கத்தா, ராஞ்சி, சிம்லாவில் விடுமுறை)
ஏப்ரல் 16: வெள்ளி - போஹாக் பிஹு (குவஹாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஏப்ரல் 18: ஞாயிறு (வார விடுமுறை)
ஏப்ரல் 21: புதன்கிழமை - ராம நவமி, கடியா பூஜை (அகர்தலா, அகமதாபாத், பேலாபூர், போபால், புவனேஷ்வர், தேஹ்ராதூன், கேங்க்டாக், ஹைதராபாத், ஜெய்பூர், கான்பூர், லக்னவ், மும்பை, நாக்பூர், பட்னா, ராஞ்சி மற்றும் சிம்லாவில் வங்கிகள் விடுமுறை)
ஏப்ரல் 24: நான்காவது சனிக்கிழமை, வங்கிகள் மூடியிருக்கும்
ஏப்ரல் 25: ஞாயிறு: மகாவீர் ஜெயந்தி


பண்டிகைகள் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்


தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு, பிஹு, குடி பட்வா, பைசாக்கி, பிஜு ஆகிய பண்டிகைகளின் காரணமாக ஏப்ரல் 13 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பின்னர் ஏப்ரல் 15 அன்று, இமாச்சல தினம், விஷு, பெங்காலி புத்தாண்டு, சிர்ஹுல் ஆகிய பண்டிகைகளுக்காக சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை உள்ளது. இதன் பின்னர், ஏப்ரல் 21 ஆம் தேதி ராம நவமியன்று வங்கிகள் மூடியிருக்கும். ஏப்ரல் 24 அன்று நான்காவது சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 25 அன்று மகாவீர் ஜெயந்தி உள்ளதால் விடுமுறை இருக்கும்.


ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR