Andhra Pradesh Capital Issue: நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் ஆந்திரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. தேசிய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி கட்சி படுதோல்வி அடைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களை தெலுங்கு தேசம் கட்சியும், 21 தொகுதிகளை பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும், 11 தொகுதிகளை ஒய்எஸ்ஆர்சிபி கட்சியும் கைப்பற்றியது.  பாஜக 8 இடங்களை வென்றது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையில் அங்கு ஜனசேனா மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்தது. தெலுங்கு தேசம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி மட்டும் 164 தொகுதிகளை கைப்பற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. 


கிங் மேக்கரான சந்திரபாபு நாயுடு...


ஆந்திராவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக பார்க்கப்பட்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக மக்களவை தொகுதிகளை வைத்திருக்கும் கட்சி தெலுங்கு தேசம் கட்சிதான். அவர்களின் வசம் 16 தொகுதிகள் இருப்பதால், மெஜாரிட்டி பெறாத பாஜக கூட்டணி ஆட்சி அமைய இவரின் ஆதரவு தேவைப்பட்டது. மேலும் இதன்மூலம், மத்திய அமைச்சரவையில் 1 மத்திய அமைச்சர் பொறுப்பையும், 1 மத்திய இணையமைச்சர் பொறுப்பையும் தெலுங்கு தேசம் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Kerala Lottery: இன்று 3 மணிக்கு Sthree Sakthi SS-419 குலுக்கல்.. லட்சாதிபதி யார்?


இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த உடன் ஆந்திராவில் பதவியேற்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறார். ஆந்திரா பிரிவினைக்கு பிறகு சந்திரபாபு நாயுடு முதல்முறையாக தேர்தலில் வென்று முதல்வராக பொறுப்பேற்கிறார். நாளை பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதலமைச்சராக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். 


அமராவதி தான் தலைநகர்


தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இன்றைய கூட்டத்தில் அவர் ஏகமனதாக முதல்வராக தேர்வானார். கூட்டணி கட்சியான ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சந்திரபாபு பெயரை முன்மொழிந்தார். இதை பாஜக மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி ஆமோதித்தார். புரந்தேஸ்வரி இந்த தேர்தலில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை சபாநாயகர் பொறுப்பிற்கு இவரின் பெயரும் அடிபடுகிறது. 


இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு,"அமராவதி நமது தலைநகராக இருக்கும். நாம் ஆக்கபூர்வமான அரசியலையே பின்பற்றுவோம், பழிவாங்கும் அரசியலை அல்ல. விசாகப்பட்டினம் மாநிலத்தின் வணிகத் தலைநகராக இருக்கும். மூன்று தலைநகரை அமைக்க முயற்சிப்பது மற்றும் இது போன்ற வஞ்சகச் செயல்கள் போன்ற விளையாட்டுகளை நாங்கள் விளையாட மாட்டோம். விசாகப்பட்டினத்திற்கு முழு முக்கியத்துவம் வழங்கப்படும். ராயலசீமாவை வளர்ச்சியடையச் செய்வோம்" என்றார்.


கைவிடப்பட்ட மூன்று தலைநகர்கள் திட்டம்


2019ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்களை அறிவித்தார். அதில், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என அறிவிப்பு வெளியானது. இருப்பினும், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆந்திரா உயர் நீதிமன்றம் அமராவதியை மட்டும் தலைநகராக தொடரும்படி உத்தரவிட்டது. எனவே, இந்த மூன்று தலைநகர் திட்டத்தை ஜெகன் மோகன் கைவிட்டார். தேர்தல் பரப்புரையில் அமராவதியை வளர்த்தெடுப்போம் என சந்திரபாபு நாயடு வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | சந்திரபாபு, நிதிஷ் சண்டைப் போட்டு வாங்கிய இலாகாக்கள் என்னென்ன?! முக்கிய துறையே இல்லையே...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ