மார்ச் 1, 2023 முதல் பல விதிகளில் மாற்றம்: சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்
Changes from March 1, 2023: மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும்.
மார்ச் 1 முதல் புதிய விதிகள்: பிப்ரவரி மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. மார்ச் 1 முதல், பல புதிய விதிகள் அமலுக்கு வரும். அவை உங்கள் மாதாந்திர நிதிநிலையை பாதிக்கலாம். மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும். அதே நேரத்தில், சில ரயில்களின் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். மார்ச் மாதத்தில் எந்தெந்த புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதையும் அவை உங்கள் மாதாந்திரச் செலவுகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிக் கடன் விலை உயரக்கூடும்
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதற்குப் பிறகு பல வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இது கடன் மற்றும் இஎம்ஐயை நேரடியாக பாதிக்கும். கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக சாமானியர்களுக்கு இஎம்ஐ நெருக்கடி அதிகமாகலாம்.
எல்பிஜி மற்றும் சிஎன்ஜி விலைகள் அதிகரிக்கலாம்
எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும். கடந்த முறை எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், இம்முறை இது அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம்
கோடை காலம் வருவதால் இந்திய ரயில்வே கால அட்டவணையில் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். அதன் பட்டியலை இந்திய ரயில்வே மார்ச் மாதம் வெளியிடக்கூடும். ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்கள் மற்றும் 5,000 சரக்கு ரயில்களின் கால அட்டவணை மார்ச் 1 முதல் மாற்றப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
மார்ச் மாதத்தில் ஹோலி மற்றும் நவராத்திரி உட்பட 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வாராந்திர வங்கி விடுமுறைகளும் இதில் அடங்கும். இந்தியாவில் வங்கிகள் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2023 இல் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) காலண்டரின்படி, தனியார் மற்றும் அரசு வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
சமூக ஊடகங்கள் தொடர்பான விதிகளில் சாத்தியமான மாற்றம்
சமீபத்தில் இந்திய அரசு ஐடி விதிகளை மாற்றியுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் இனி இந்தியாவின் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். மத உணர்வுகளை தூண்டும் பதிவுகளுக்கு புதிய விதி பொருந்தும். இந்த புதிய விதியை மார்ச் மாதத்தில் அரசு அமல்படுத்தக்கூடும். தவறான இடுகைகளுக்கு பயனர்கள் அபராதத்தையும் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்.
காசி விஸ்வநாதர் கோவிலில் நடக்கும் ஆரத்திக்கு இனி அதிக தொகை வசூலிக்கப்படும்
காசி சென்று இறைவனை வழிபடும் எண்னம் உள்ளதா? வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிவபெருமானின் தீபாராதனை ஆரத்திக்கான தொகை உயர்ந்துள்ளது. பக்தர்கள் இதற்கு முன்பை விட ரூ.150 கூடுதலாக செலுத்த வேண்டும். முன்னர் தீபாராதனை ஆரத்திக்கு 350 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது இதற்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும். இது தவிர, சப்தரிஷி ஆரத்தி, சிருங்கர் போக் ஆரத்தி மற்றும் மத்தியாஹ்ன போக் ஆரத்தி ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளுக்கு மேலும் 120 ரூபாய் செலுத்த வேண்டும். முன்பு இவற்றின் விலை ரூ.180 ஆக இருந்தது, இப்போது ரூ.300 செலுத்த வேண்டும். இந்த புதிய விதி 1 மார்ச் 2023 முதல் அமலுக்கு வரும்.
மேலும் படிக்க | 8th Pay Commission:வருகிறதா அடுத்த ஊதியக்கமிஷன்? அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ