பெங்களூரு: கர்நாடகாவின் ஹூப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய சோனியா காந்தி, கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று கூறினார். அப்போது அவர் பேசியது, கர்நாடகாவின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோனியா காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு


சோனியா காந்திக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடுமாறு கர்நாடகா ஆளும் கட்சியான பாஜக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சனிக்கிழமையன்று ஹுப்பள்ளியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியின் உரையைக் குறிப்பிட்ட பாஜக, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் "6.5 கோடி கன்னடர்களுக்கு வலுவான செய்தியை அனுப்புகிறார்" என்று தெரிவித்துள்ளது.


பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி 


இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக, சோனியா காந்தி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய படங்களையும் வெளியிட்டது. “கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும் அல்லது ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது” என்று அக்கட்சியின் டிவிட்டர் செய்தி தெரிவிக்கிறது.


மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?


மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே


சோனியா காந்தியின் கருத்து "அதிர்ச்சியூட்டுவது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விவரித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, சோனியா காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும், "அத்தகைய அறிக்கை" மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.



பாஜக தேர்தல் நிர்வாகக் குழுவின் கன்வீனர் கரந்த்லாஜே, அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவும், முன்மாதிரியான தண்டனை நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


“இன்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் சோனியா காந்திக்கு எதிராக புகார் கொடுத்தோம். அவர் ஹுப்பாலியில் ஆற்றிய உரையில் கர்நாடகத்தின் இறையாண்மை பற்றி பேசினார். இறையாண்மையை நாட்டுக்காக பயன்படுத்துகிறோம். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரினோம்,” என்று மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான ஷோபா கரந்த்லாஜே ஏ.என்.ஐயிடம் இடம் கூறினார்.


மேலும் படிக்க | பாஜகவின் ஊழல் பயங்கரவாதம்! நாட்டின் சொத்துக்களை விற்கும் கட்சி! காங்கிரஸ் புகார்


பூபேந்தர் யாதவ், அனில் பலுனி மற்றும் தருண் சுக் ஆகியோர் அடங்கிய பாஜக தலைவர்கள் குழு இன்று தேர்தல் ஆணையத்தை சந்தித்து, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இது "தேச விரோத செயல்" என்று கூறினார்.


"சோனியா காந்தி வேண்டுமென்றே இறையாண்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது சிறு சிறு கும்பலின் நிகழ்ச்சி நிரல், எனவே அவர்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த தேச விரோதச் செயலுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.



இந்தியாவில் இருந்து கர்நாடகா மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வெளிப்படையாக வாதிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். சோனியா காந்தியின் கருத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, தேச விரோத சக்திகள் என்ற நோய், காங்கிரஸின் உயர்மட்டத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை ஹுப்பள்ளியில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரு நாள் கழித்து பிரதமரின் குற்றச்சாட்டு வந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் போரில் முதல்முறையாக களமிறங்கிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜகவை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.


மேலும் படிக்க | பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போட்டியிடும் தேர்தல் இது: பிரதமர் மோடி


“ஆளும் கட்சியின் கொள்ளை, பொய்களில் இருந்து விடுபடாமல் கர்நாடகாவும் நாட்டின் பிற பகுதிகளும் முன்னேற முடியாது. ஈகோ மற்றும் வெறுப்பின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.


அவர் மேடையில் காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி என பல தலைவர்கள் இருந்தனர். பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி கட்சியில் இணைந்த கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் அதே மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஷெட்டர், 2018 ஆம் ஆண்டு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார். கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தலில் வாக்களித்து முடிவுகள் மே மாதம் 13ஆம் தேதியன்று அறிவிக்கப்படும். 


மேலும் படிக்க | பாஜக சார்பில் கர்நாடக மக்கள் போட்டியிடும் தேர்தல் இது: பிரதமர் மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ