பட்ஜெட்டுக்கு முன்னதாக, உங்கள் அசெட் ஒதுக்கீடு உத்தி எப்படி இருக்க வேண்டும், பட்ஜெட்டில் ஏற்றம் பெற வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் தந்திரோபாய மற்றும் முக்கிய போர்ட்ஃபோலியோவில் எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை எவ்வாறு அலங்கரிக்கலாம்? இதனுடன், பட்ஜெட்டுக்கு முன்னும் பின்னும் உங்கள் முதலீட்டிற்கான தயாரிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பட்ஜெட் 2023க்கு முன் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட் 2023 - எங்கு அதிக கவனம் செலுத்தப்படும்? 
* மூலதனச் செலவினங்களில் கவனம் செலுத்தப்படும்
* எளிதாக வணிகம் செய்வதில் சிறப்பு கவனம்
* உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வாய்ப்பு
* தொழிலாளர் மிகுந்த பிரிவினருக்கான PLI திட்டத்தின் அறிவிப்பு
* கிராமப்புற நலனில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள் 


பட்ஜெட் 2023- எந்தத் தலைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்?
* மேன்யுஃபேக்சரிங், இன்ஃப்ரா
* டிஃபென்ஸ்
* ரூரல் செக்டர்
* கன்சப்ஷன்
* கேபிடலைசேஷன்


உற்பத்தித் துறைக்கு ஊக்கம்
* PLI திட்டத்தின் நோக்கத்தை அதிகரிப்பதில் கவனம்
* பிஎல்ஐ திட்டத்தின் கீழ் துறைக்கு ஊக்கத்தொகை
* சாலை, ரயில், உள்கட்டமைப்புத் துறைக்கான செலவுகள் அதிகரிப்பு
* புதிய தொழில் தொடங்குவது தொடர்பான விதிமுறைகள் எளிதாகுதல்.


பாதுகாப்புத் துறை மேலும் பலம் பெறும்
* பாதுகாப்பு பட்ஜெட்டில் நல்ல அதிகரிப்பு
* பாதுகாப்புத் துறை பட்ஜெட் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% இருக்க வேண்டும்
* பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா ஊக்கம் 
* வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை 50-68% அதிகரிப்பு
* உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.


கிராமப்புறங்களை விரிவுபடுத்த வேண்டும்
* இத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்
* எப்எம்சிஜி, வேளாண் ரசாயனம், பண்ணை உபகரணங்கள் ஊக்கம் பெறும்
* விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்
* கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
* கிராமப்புறங்களில் பணவீக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* விநியோகச் சங்கிலி சிக்கல்களை அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.


நுகர்வுத் துறை வளர்ச்சி பெறும்
* வரி விலக்கு அளித்து சாமானியர்கள் பயன்பெற வேண்டும்
* வரி அடிப்படையை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும்
* பிரிவு 80 சி மற்றும் பிரிவு 24 இன் கீழ் அடிப்படை வரியை அதிகரிக்க வேண்டியது அவசியம்
* உணவுப் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு இந்தத் துறைக்கு ஊக்கமளிக்கும்.


மேலும் படிக்க | Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ