பட்ஜெட் 2023-24: 2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய தினமான ஜனவரி 31ஆம் தேதி அன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பங்குதாரர்கள் பட்ஜெட் தொடர்பான தங்களது பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளின் பட்டியலை கையளித்துள்ளனர். சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அமைப்பான ஐசிஏஐ தனது பரிந்துரைகளின் பட்டியலை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீட்டு வரம்பை தற்போதுள்ள ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நிதி அமைச்சருக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
PPF இல் முதலீடு செய்வது பாதுகாப்பானது
ICAI இன் படி, PPF வைப்புத் திட்டத்தில் முதலீட்டின் வரம்பை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் சுயதொழில் செய்பவர்களுக்கு, PPF என்பது வரியைச் சேமிக்க பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்தைத் தரும் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். பிபிஎஃப் முதலீட்டு வரம்பு நீண்ட காலமாக மாற்றப்படவில்லை. ICAI படி, PPF இல் முதலீட்டு வரம்பை அதிகரிப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு சேமிப்பின் பங்கை அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள்
இதன் படி PPF இன் முதலீட்டு வரம்பு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, மேலும் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சத்தை பிபிஎஃப்-ல் முதலீடு செய்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர் ரூ.1.33 கோடி வருமானத்தைப் பெறுவார். தற்போது PPFக்கு 7.1 சதவீத வட்டியை அரசாங்கம் செலுத்துகிறது. PPF இல் கிடைக்கும் வட்டிக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அதாவது, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் கோடீஸ்வரராகலாம் என்பது இது தெளிவாகிறது.
நீண்ட கால முதலீடு சாத்தியம்!
தற்போது, பிபிஎஃப் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், இது மாதாந்திர அல்லது காலாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் செய்யப்படலாம். முதலீட்டாளர்கள் பிபிஎஃப் கணக்கில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்யலாம். முதலீட்டாளருக்குப் பணம் தேவையில்லை என்றால், அவர் தனது பிபிஎஃப் கணக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து வருட பிளாக் காலத்தின் அடிப்படையில் நீட்டிக்கலாம். இதற்கு PPF கணக்கு சமர்ப்பிக்கும் படிவத்தை மட்டுமே நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Provident Fund: மொபைல் நம்பர், SMS மூலம் நிதி இருப்பை சரிபார்த்து கொள்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ