COVID-19 Update: கடந்த 24 மணி நேரத்தில் 1.65 லட்சம் புதிய தொற்று பாதிப்பு
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1,65,553 புதிய நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,94,800 என்ற அளவை எட்டியுள்ளது.
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.65 லட்சம் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் மற்றும் 3,460 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (மே 30, 2021) வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1,65,553 புதிய நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,94,800 என்ற அளவை எட்டியுள்ளது. இப்போது நாடு முழுவதும் 21,14,508 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால், 3.25 லட்சம் பேர் இறந்துள்ள நிலையில், 2.54 கோடிக்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (The Indian Council of Medical Research) மே 29 வரை மொத்தம் 34,31,83,748 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20,63,839 மாதிரிகள் மட்டும் சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியா 21 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, இதில், 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 18-44 வயதுக்குட்பட்ட 1.82 கோடி பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா மருந்து DRDO 2-DG: விலை விபரத்தை வெளிட்டது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்
முன்னதாக சனிக்கிழமையன்று, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ், குறைந்தது 16.7 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. இது 1.37 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டில், தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 8 இந்தியர்களிலும் கிட்டத்தட்ட 1 ஒரு நபர் என்ற அளவில் உள்ளது.
"18+ வயதுள்ளவர்ளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாட்டில் இவர்களின் மக்கள் தொகை சுமார் 94.47 கோடியாக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, ஒவ்வொரு 11 இந்தியர்களிலும் இந்த எண்ணிக்கை 2 ஆக உள்ளது" என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
ALSO READ | COVID-19: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று நேரடி ஆய்வு..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR