ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் (Dr.Reddy's) ஆய்வகங்களுடன் இணைந்து DRDO உருவாக்கிய கொரோனாவிற்கான புதிய மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose -2-DG) அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் வருகிறது. இதனை தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
இந்த மருந்தை கொரோனா (Corona Virus) நோயாளிகளுக்கு அளிக்கும் போது, பயன்பாடு மருத்துவ ஆக்ஸிஜன் சிகிச்சைக்கான தேவை பெருமளவில் குறைவதோடு, நோயாளிகள் விரைவாக குணமடைகின்றனர். அதனால் கொரோனா சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
2-டி.ஜி.மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் கொரோனா வைரஸ் (Corona Virus) பல்கி பெருகுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கடந்த மே மாதம் 17ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் முதல் தொகுதியாக 10,000 பாக்கெட்டுகளசி வெளியிட்டனர். நேற்று, இரண்டாவது தொகுதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அதன் விலை மற்றும் பிற விபரங்களை டாக்டர் ரெட்டீஸ் வெளியிட்டுள்ளது. 2DG, அதாவது 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் மருந்தின் விலை ஒரு சாஷேக்கு, அதாவது ஒரு பாக்கெட்டிற்கு ரூ.990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் வழக்கமான உற்பத்தி ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் வணிக ரீதியிலான விற்பனை ஜூன் மாதம் நடுப்பகுதியில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
The price of DRDO’s 2DG anti-COVID 19 drug has been kept at Rs 990 per sachet by Dr Reddy’s lab. Govt hospitals, central and state govt would be provided the medicine at a discounted price: Govt officials pic.twitter.com/FEic70fSq5
— ANI (@ANI) May 28, 2021
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR