7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை  என ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டமன்றம் (TN Assembly Session) இன்று காலை 11 மணிக்கு ஒமந்தூர் அரசு எஸ்டேட்டில் உள்ள உள்ள கலைவானர் அரங்கத்தில் கூடியது. 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட DMK MLA-கள் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK. Stalin) கூறியுள்ளார்.


ALSO READ | பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூடியது தமிழக சட்டப்பேரவை..! 


ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் (Banwarilal Purohit) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல என்று திமுக MLA-கள் குற்றம் சாட்டினர். DMK உறுப்பினர்கள் முழுக்கத்தை அடுத்து பட்ஜெட்டில் (Budget 2021-22) தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் தனது உரையில் இலங்கையில் உள்ள மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் கூறியுள்ளார் தமிழகத்தில் இரு மொழி கொள்கை ன்தொடரும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.


இதனிடையே வெளிநடப்பு செய்த பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR