பரிதாபமாக உயிரிழந்த 21 வயது விவசாயி... போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த விவசாயிகள்
Farmers Protest: விவசாயி ஒருவர் இறந்ததை அடுத்து, டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
Farmers Protest: பல கோரிக்கைகளுக்காக விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டத்தின் போது ஒரு விவசாயி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், நேற்று விவசாயிகள் டெல்லியை நோக்கிய தங்கள் பேரணியை மீண்டும் தொடங்கினர். அப்போது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஏற்பட்ட போராட்டத்தில் சுப்கரன் சிங் என்ற 21 வயது விவசாயி ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் அப்பகுதிக்கு அருகே பதற்றம் ஏற்பட்டது.
இதில் சில காவல்துறையினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. விவசாயி ஒருவர் இறந்ததை அடுத்து, டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் 2 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பாந்தர், ஷம்புவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், ஷம்பு மற்றும் கானௌரி எல்லையில் விவசாயிகளுக்கு எதிராக ஆக்ரோஷமான அடக்குமுறைகளை பயன்படுத்தியதாக, மத்திய அரசு மற்றும் ஹரியானா பாதுகாப்புப் படையினரை விவசாயிகள் கடுமையாக சாடியுள்ளனர். தங்கள் மீது தேவை இல்லாமல் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாகவும், ஹரியானா பாதுகாப்புப் படையினர் பஞ்சாப் பிரதேசத்தில் உள்ள தங்கள் முகாமுக்குள் நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். விவசாயிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நேற்று நடந்த கைகலப்பில் சுமார் 100 விவசாயிகள் காயமடைந்தனர்.
பாதுகாப்பு படையினர், தங்கள் முகாம்பளுக்குள் நுழைந்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை தூக்கி எறிந்ததாகவும், டிராக்டர்களில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர்களை தாக்கியதாகவும் சில விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | கர்நாடகாவில் ஹூக்கா பார்களுக்கு தடை... சிகரெட் விற்பனைக்கும் கட்டுப்பாடு!
முன்னதாக, சென்ற வாரம், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இடைநிறுத்தினர். ஷம்பு எல்லையில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அரசாங்க அமைச்சர்களுடன் தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மக்காச்சோளம், தானிய பருப்பு வகைகள் மற்றும் பருத்தி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பயிர்களுக்கு உத்தரவாத விலையில் ஐந்து ஆண்டு ஒப்பந்தங்களை வழங்குவதற்கான முன்மொழிவை அரசாங்கம் விவசாயிகள் முன் வைத்தது. எனினும். விவசாயிகள் இதை நிரகாரித்தனர்.
இதன் பிறகு புதன்கிழமை தங்கள் பேரணியை மீண்டும் தொடங்க முடிவு செய்தனர். குறைந்தது 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் (MSP) அளிக்கும் புதிய சட்டத்தை விவசாயிகள் கோரியுள்ளனர். இதன் மூலம் வருமானம் சீராகும் என அவர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்காத மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகத் தாக்கி வருகின்றன. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கர், “விவசாயிகள் நாட்டின் 'அன்னதாதாக்கள்', அவர்களுடன் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது” என்று கூறினார்.
இணைய சேவைகள் முடக்கம்
பாஜக ஆளும் ஹரியானா அரசு, விவசாயிகளின் போராட்டம் காரணமாக 7 மாவட்டங்களில் மொபைல் இணையம் மற்றும் மொத்த குறுஞ்செய்தி சேவைகளுக்கான தடையை பிப்ரவரி 23 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ