காங்கிரஸ் கூட்டணிக்கு ஓகே சொன்ன அகிலேஷ்! உ.பியில் 80ல் 17 தொகுதிகளில் திருப்தியான ராகுல் காந்தி

Congress Lok Sabha 2024 Contest Big Update: காங்கிரசுடனான கூட்டணிக்கு சமாஜ்வாதி கட்சி ஒப்புக்கொண்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2024, 07:44 PM IST
  • காங்கிரசுடனான கூட்டணிக்கு சமாஜ்வாதி கட்சி ஒப்புக்கொண்டது
  • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
  • காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் 17 தொகுதிகளில் போட்டி
காங்கிரஸ் கூட்டணிக்கு ஓகே சொன்ன அகிலேஷ்! உ.பியில் 80ல் 17 தொகுதிகளில் திருப்தியான ராகுல் காந்தி title=

உத்தரப்பிரதேசத்தில், மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரசுடனான கூட்டணியை சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உறுதி செய்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது 17 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு முடிவடையும் வரை ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த திங்கள்கிழமையன்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இடம் பெற்றிர்நுத நிலையில், அகிலேஷின் இந்த அறிவிப்பு, காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

உண்மையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தகவல்கள் வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தையில் சுணக்கம் இருந்ததை உறுதி செய்யும் வகையில், தொகுதிப் பங்கீடு முடிவடையும் வரை ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்காது என்று, தனது முடிவை அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க - INDIA Alliance: 9 மாநிலங்களில் கூட்டணி, 290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு எனத் தகவல்

ஆனால், 2009 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களுக்கு சமமான இடங்களையாவது அளிக்க வேண்டும் என்று உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பேச்சுவார்த்தை சுணக்கம் அடைந்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுமோ என்ற ஊகங்களும் உலா வந்தன.

ஏனென்றால், எந்தக் கட்சியுடனும் என மாயாவதியும் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடியாத நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கமாட்டேன் என்ற அகிலேஷின் அறிவிப்பு, உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் 50% க்கும் அதிகமான வேட்பாளர்கள் ஓபிசி பிரிவினரை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. தொகுதிப் பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

யாருக்கு எந்த தொகுதி என பேசி முடிவு செய்ய வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தொகுதியில் சமாஜ்வாதி போட்டியிடும் என்று அந்தக் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். மக்களவை தேர்தலில் அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவோம் என, இன்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தது காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் அளித்திருக்கிறது.

மேலும் படிக்க | மாதம் ரூ.9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உடனே படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News