Ban on Hookah Bars: கர்நாடகா மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதா, இன்று கர்நாடக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. விதியை மீறுபவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
மாநிலத்தில், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்கான முயற்சி
கூடுதலாக, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கும் மாநில அரசு தடை செய்துள்ளது. மாநிலத்தில், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்கான முயற்சி இது எனவும் சித்தராமையா தலைமையிலான அரசு கூறியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவில், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவகுமார் சட்டசபையில் கொண்டு வந்த மசோதா
மேலும், பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சரான துணை முதல்வர் டி கே சிவகுமார் சட்டசபையில், அரசு குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கு வகையில், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) திருத்த மசோதா 2024 கொண்டு வந்தார். இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பெங்களூரு நகரில் வசிக்கும் 5.51 லட்சம் வரி செலுத்துவோர், 5 முதல் 7 லட்சம் பேர் சொத்து வரி வரம்பிற்குள் வராதவர்கள் மற்றும் 3 லட்சம் பகுதி சொத்து வரி செலுத்துவோர் உட்பட சுமார் 13 முதல் 15 லட்சம் பேர் பயனடைவார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவைத் தொகைக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே, ஹூக்கா பார்களை தடை செய்யும் அரசின் முடிவைப் பற்றி பேசுகையில், ஏராளமான இளைஞர்கள், டீன் ஏஜ் பருவத்தில் உள்ளவர்கள் நலன் கருதி, அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
முன்னதாக, இந்த மாதம், தெலுங்கானா அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்யும் மசோதாவை சட்ட பேரவையில் நிறைவேற்றியது. அதே போன்று கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாதம் ரூ.9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உடனே படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ