1,200 டிராக்டர்கள், 300 கார்களுடன் டெல்லி எல்லையில் 14,000 விவசாயிகள்: தயார் நிலையில் போலீஸ்

Farmers Protest: காவல்துறை மூலம் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் பெரிய லாரிகள், புல்டவுசர்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை தயாராக வைத்துள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2024, 09:01 AM IST
  • தயார் நிலையில் 30,000 கண்ணீர் புகை குண்டுகள், பிற பாதுகாப்பு உபகரணங்கள்.
  • ஒரு போராட்டக்காரர் அல்லது வாகனம் கூட தேசிய தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு.
  • 177 சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணைய இணைப்புகளை தற்காலிகமாக முடக்கம்.
1,200 டிராக்டர்கள், 300 கார்களுடன் டெல்லி எல்லையில் 14,000 விவசாயிகள்: தயார் நிலையில் போலீஸ் title=

புது டெல்லி: மத்திய அமைச்சர்களுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதையடுத்து, ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கிய தங்கள் பேரணியை தொடரவுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதம் மற்றும் பிற கோரிக்கைகளுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், விவசாயிகள் இன்று பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இருந்து 'டெல்லி சலோ' போராட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ளனர்.

புதன்கிழமை டெல்லியை நோக்கிய தங்கள் பேரணி மீண்டும் தொடரும் என விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்ததால், டெல்லி எல்லை முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல அடுக்கு தடுப்புகளும் வைக்கபட்டுள்ளன. எனினும், காவல்துறை மூலம் போடப்பட்டுள்ள இந்த தடுப்புகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் பெரிய லாரிகள், புல்டவுசர்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை தயாராக வைத்துள்ளனர். இப்படிப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்யுமாறு ஹரியானா காவல்துறை பஞ்சாப் மாநில அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் ஹரியானா எல்லையில், சுமார் 14,000 விவசாயிகள் 1,200 டிராக்டர்கள், 300 கார்கள் மற்றும் 10 மினி பேருந்துகளுடன் கூடியுள்ளனர். இது தவிர தாபி-குஜ்ரான் எல்லைப் பகுதியில் 4,500 போராட்டக்காரர்கள், 500 டிராக்டர்களுடன் தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று டெல்லிக்குள் நுழையவுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ள நிலையில், டெல்லி காவல்துறை முழு விழிப்புடன் உள்ளது. விவசாயிகள் கனரக வாகனங்களுடன் நுழைந்தால், அவர்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கான ஒத்திகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் விவசாயிகள் டெல்லி எல்லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Rajya Sabha Election: சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

இதற்கிடையில் டெல்லியின் மூன்று எல்லைப் புள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எல்லையின் சில குறிப்பிட்ட வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் செவ்வாயன்று பஞ்சாப் அரசிடம் விவசாயிகள் அதிக அளவில் கூடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நெடுஞ்சாலைகளில் டிராக்டர் ட்ராலிகளை இயக்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், விவசாயிகள் பேருந்துகள் அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி டெல்லிக்கு செல்லலாம் என்றும் கூறியது.

முன்னதாக, உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசுக்கு விவசாயிகள் பேரணி குறித்த ஒரு கடிதத்தை எழுதியது. இதில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதைக் குறித்து கவலை தெரிவித்த உள்துறை அமைச்சகம், இதற்கு விவசாயிகளின் போர்வையில் போராட்டத்தில் நுழைந்திருக்கும் சில சமூக விரோதிகளே காரணம் என கூறியுள்ளது. 

டெல்லியில் முன்னேற்பாடுகள்

இதற்கிடையில், டெல்லி போலீசார் ஏற்கனவே 30,000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை தயாராக வைத்துள்ளனர். ஒரு போராட்டக்காரர் அல்லது வாகனம் கூட தேசிய தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 177 சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணைய இணைப்புகளை தற்காலிகமாக முடக்குவதற்கான உத்தரவையும் அரசாங்கம் வழங்கியது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) வழங்கிய இந்த உத்தரவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில் செயல்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க | சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வெற்றி என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1 width="100%">

 

Trending News