Haryana Latest News: பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) ஆளும் கூட்டணி முறிந்ததை அடுத்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், மனோகர் லால் கட்டார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டு உள்ளது. முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ஹரியானா சட்டசபையில் யாருக்கு எத்தனை இடங்கள்? 


90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 41 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்களும், ஜேஜேபிக்கு 10 எம்எல்ஏக்களும் உள்ளனர். இது தவிர அரியானா லோகித் கட்சி (எச்எல்பி) மற்றும் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏவும், 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர்.


தற்போது ஜனநாயக் ஜனதா கட்சி தனது ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால், எச்எல்பி மற்றும் 6 சுயேச்சைகளுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும் என பாஜக கருதுகிறது, அதற்கான பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு கூட்டணி அமைந்தால், 48 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும். இது பெரும்பான்மை எண்ணிக்கையான 46 இடங்களை விட 2 அதிகமாகும்.


மேலும் படிக்க - Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதற்கு ஏன் இந்த எதிர்ப்பு?


ஹரியானா ஆட்சியில் ஜேஜேபி கட்சியின் பங்கு என்ன?


பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி திரும்பப் பெற்றதை அடுத்து, டெல்லியில் தனது எம்எல்ஏக்களுடன் சவுதாலா ஆலோசனை நடத்துவார் என்றும், அதில் கட்சியின் எதிர்கால வியூகம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜேஜேபி கட்சியின் சார்பில் நாளை மார்ச் 13 ஆம் திகதி ஹிராஸில் பேரணி நடைபெறவுள்ளது.


பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சியில் ஜேஜேபிக்கு 3 அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, அனுப் தனக் மற்றும் தேவேந்திர சிங் பாப்லி ஆகியோர் அடங்குவர். துணை முதல்வராகவும் சவுதாலா இருந்தார்.


மேலும் படிக்க - மிஷன் 400: இலக்கை அடைய பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ போடும் மாஸ்டர்பிளான்


பாஜக - ஜேஜேபி கூட்டணி உடைந்தது ஏன்?


ஜேஜேபி தலைவர் சவுதாலாவும் நேற்று திங்களன்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன்,  மக்களவைத் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாரத்தை நடத்தினார். அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவதால், எந்த ஒரு தொகுதியும் ஒதுக்க முடியாது என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா திட்டவட்டமாக கூறியுள்ளார்.


அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் 2 இடங்களை பாஜகவிடம் இருந்து ஜேஜேபி கோரியது. அவர் ஹிசார் மற்றும் பிவானி-மகேந்திரகர் தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால் அரியானா மாநில பாஜக, ஜேஜேபி கட்சிக்கு எந்த ஒரு இடத்தையும் ஒதுக்கவில்லை மற்றும் மேலும் 10 மக்களவைத் தொகுதியிலும் பாஜகவே போட்டியிட விரும்புகிறது.


மேலும் படிக்க - திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?


கூட்டணியை முறிவால் பாஜகவுக்கு பலன் கிடைக்குமா?


ஜே.ஜே.பி கட்சி உடனான கூட்டணி உடைந்ததால், பாஜகவுக்கு தான் அதிக லாபம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. மேலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், பாஜக-ஜேஜேபி கூட்டணி தொடர்ந்திருந்தால், ஒட்டுமொத்த பாஜக எதிர்ப்பு வாக்குகளும், எதிர்கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.


பாஜக-ஜேஜேபி கூட்டணி பிரிந்ததால், தற்போது வாக்குகள் காங்கிரஸுக்கும் ஜேஜேபிக்கும் இடையில் பிரிக்கப்படும். எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக நம்புகிறது. 2019 ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத் தேர்தலிலும் இது போன்ற நாடகம் ஒன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா... தள்ளிப்போகும் தேர்தல் அறிவிப்பு? - பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ