புதுதில்லி:  பாஜக (BJP) நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைபாட்டுடன் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என காங்கிரஸ் கட்சி (Congress) குற்றம் சாட்டியதை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுத்த பாரதீய ஜனதா கட்சியின்  (Bharatiya Janata Party) தலைவர் ஜேபி நட்டா ( JP Nadda) அவர்கள், திரு.மன் மோஹன் சிங் தலைமையிலான யுபிஏ ஆட்சி காலத்தின் போது, ஆயிரக்கணக்கான சதுர மிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை சீனாவிற்கு தாரை வார்த்தது என்றும்,  2010 முதல் 2013 வரை, 600 ஊடுருவல்களை அனுமதித்தது என்றும் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லடாக்கில், கல்வான் பள்ளதாக்கில் (Galwan Valley),  சீனா இராணுவம் 20திற்கும் மேற்பட்ட வீரர்களை கொன்றதை அடுத்து,  திரு. மன்மோஹன் சிங் (Manmohan Singh), மோடி அரசை குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. 


READ ALSO | இந்தியா சீனாவுக்கு எதிராக இரண்டு போர்களை எதிர்த்துப் போராடுகிறது: கெஜ்ரிவால்!


இதற்கு முன்னதாக, 2017-ல் நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் 2019-ல் நடந்த பாலகோட் வான் தாக்குதல்களை அடுத்தும் அதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு கூறி, காங்கிரஸ் கட்சி, ராணுவ வீரர்களை அவமானப்படுத்தியது என்றும் அவர் கூறினார். 


முன்னதாக காங்கிரஸ் (Indian National Congress)கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi),  நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, அரசு, திரு.மன் மோஹன் சிங்-ன் அறிவுரையை பின்பற்றும் என நம்புவதாக் கூறினார்.


சீனாவின் வரம்பு மீறல் குறித்த முழு விபரங்களை பிரதமர்  வெளியிடவில்லை என்றும், இது இந்திய வீரர்களின் உயிர் தியாகத்தை  அவமதிப்பது போல் ஆகும் என்றும்  கூறியதோடும், தனது கருத்தை பிரதமர் ஏற்றுக்கொள்வார் என்று தாம் நம்புவதாக ட்வீட் செய்தார். 
 
READ ALSO | Border Clash சீன இராணுவம் நமது எல்லைக்குள் நுழையவில்லை: பிரதமர் மோடி


பாஜக தலைவர் ஜேபி நட்டா, இது காங்கிரஸ் கட்சிகளின் வார்த்தை விளையாட்டு என்று கூறுவதை தவிர வேறெதுவும் இல்லை என்றும், மக்கள் இவர்கள் கூறுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.