Border Clash சீன இராணுவம் நமது எல்லைக்குள் நுழையவில்லை: பிரதமர் மோடி

நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்க நமது பாதுகாப்பு படையினர் முழுமையாக தயார் நிலையில் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 19, 2020, 10:50 PM IST
  • நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்க நமது பாதுகாப்பு படையினர் முழுமையாக தயார் நிலையில் உள்ளனர்: PM Modi
  • மோடி தலைமையில் சீனாவுடனான ஏற்பட்டுள்ள மோதலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்.
  • சீனா இராணுவம் அவர்கள் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை.
Border Clash சீன இராணுவம் நமது எல்லைக்குள் நுழையவில்லை: பிரதமர் மோடி title=

புது டெல்லி: எல்லைப் பகுதியில் சீனாவுடனான ஏற்பட்டுள்ள மோதலை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மோடி தலைமை இந்தியா-சீனா எல்லை (India-China border) நிலைமை குறித்து விவாதிப்பதற்காக புது தில்லி, லோக் கல்யாண் மார்க் பகுதியில் 7 மணிக்கு தொடங்கியது.

ஜூன் 15 முதல் 16 வரை ஐந்து நாட்களாக நடந்த இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ மோதலின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியும் படிக்கவும் | ‘மக்களிடம் உண்மையை கூறுங்கள்’; பிரதமரிடம் சோனியா காந்தி கோரிக்கை

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் (Ladakh's Galwan Valley) சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் (Indian Army soldiers) கொல்லப்பட்டனர். லேவில் (Leh) உள்ள ஒரு மருத்துவமனையில் 18 வீரர்கள் மீண்டு வருவதாகவும், 58 பேர் மற்ற மருத்துவமனைகளில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் (Indian Army) தெரிவித்துள்ளது. அனைவரும் 7-14 நாட்களில் மீண்டும் கடமையில் சேருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஒரு அறிக்கையின்படி, வன்முறை சம்பவத்திற்கு பின்னர் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ -  People’s Liberation Army ) தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்து இந்திய ராணுவ வீரர்கள் இந்திய தரப்பில் ஒப்படைக்கப்பட்டதாக, இந்த விவகாரத்தை நன்கு அறிந்த ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் அனைத்து தரப்பு சந்திப்பில் பேசியது,

எல்.ஏ.சி (LAC border) எல்லையில் உள்ள ஆயுதப் படைகளுக்கு "தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது" என்றும் மோடி தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியும் படிக்கவும் | கல்வான் மோதலின் போது இந்திய வீரர்களை சீனா சிறை பிடிக்கவில்லை

"நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்க நமது பாதுகாப்பு படையினர் முழுமையாக தயார் நிலையில் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று பிரதமர் கூறினார்.

ஆனால் இப்போது நமது வீரர்கள், அந்த பகுதிகளை கண்காணிக்கவும் பதிலளிக்கவும் முடிகிறது என்று மோடி கூறினார்.

"அவர்கள் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் (China's People’s Liberation Army) எந்தவொரு பகுதியும் கைப்பற்றமுடியவில்லை" என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

இந்த செய்தியும் படிக்கவும் | இந்திய-சீன எல்லை பதற்றம் காரணமாக ராமர் கோவில் கட்டுமான பணி இடைநிறுத்தம்!

"கடந்த சில ஆண்டுகளில், நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். நமது ஆயுதப்படைகளின் தேவைகள், அது போர் விமானங்கள், மேம்பட்ட ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், அதுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் மோடி கூறினார்.

காற்று, நிலம் அல்லது கடல் என எதுவாக இருந்தாலும், நம் நாட்டைப் பாதுகாக்க நமது ஆயுதப்படைகள் என்ன செய்ய வேண்டுமோ, அவர்கள் செய்வார்கள்" என்று கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Trending News