புதுடெல்லி: இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் (IPL Auction) பிப்ரவரியில் நடத்தப்படலாம். இதற்காக பி.சி.சி.ஐ (BCCI) பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும், அதற்கு சில விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டிகளுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், கிரிக்கெட் வீரர்கள் ஏலம் குறித்து மேலும் அக்கறை கொண்டு வருகின்றனர். வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு புதிய வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். இது தொடர்பாக புதிய விதிகளும் உருவாக்கப்படுகின்றன.


விதிகள் இவை தான்…
இந்த போட்டியைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள BCCI, ஐபிஎல் 14 வது சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தனிப்பட்ட முறையில் சேர விரும்பினால், வாரியம் நேரடியாக மாநில சங்கங்களுடன் பேசும் என்று தெரிவித்துள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் இதற்கு வீரரின் முகவர் (agent) அழைக்கப்பட மாட்டார்.


Also Read | 2021 இல் ஒப்பந்தங்கள் முடியும் கால்பந்து நட்சத்திரங்கள் 


ஏல நடைமுறை


ஐ.பி.எல் உரிமையாளர்கள், தாங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. எந்த ஒப்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள் பிப்ரவரி 4 வரை ஐபிஎல் 2021 பிளேயர் ஒப்பந்தத்துடன் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.


ஏலம் எப்போது நடக்கும்?


ஐபிஎல் 2021 (IPL Auction 2021) க்கான ஏலம் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வீரரை ஏலத்தில் சேர்க்க விரும்பினால், அவர்கள் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னர் தங்கள் பெயரை அனுப்ப வேண்டும் என்று மாநில சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli


19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான நிபந்தனை


ஏலத்தில் பங்கேற்க விரும்பும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கும் பிசிசிஐ சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தகைய வீரர்கள் அனைவரும் மாநில சங்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் வீரர் குறைந்தது ஒரு முதல் வகுப்பு (First Class) அல்லது பட்டியல்-ஏ (List-A match) போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.


ஓய்வு பெற்ற உள்நாட்டு வீரர்களுக்கான விதிகள்


உள்நாட்டு கிரிக்கெட்டில் (Cricket) இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் இந்த வாரியம் ஒரு நிபந்தனை விதித்துள்ளது, அதாவது அவர்கள் ஐ.பி.எல்லில் பங்கேற்க விரும்பினால், அவர்கள் மாநில சங்கங்களிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


Also Read | மருத்துவமனையில் விராட் கோலி பாதுகாப்பை அதிகரிக்கும் காரணம் என்ன?


ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறுமா?


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டித்தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது, மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) வென்றது. இந்த ஆண்டு இது எங்கு ஏற்பாடு செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரை இந்தியாவில் நடத்த வேண்டும் என விரும்புகிறார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR