பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவருமே சகோதரர்கள், இருவரும் பிரபல வீரர்கள். இவர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இந்த செய்தியை பரோடா கிரிக்கெட் வாரியம் (Baroda Cricket Association) டிவிட்டர் செய்தியில் உறுதிபடுத்தியிருந்தது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2021, 05:45 PM IST
பாண்டியா சகோதரர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த Virat Kohli

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா இருவருமே சகோதரர்கள், இருவரும் பிரபல வீரர்கள். இவர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இந்த செய்தியை பரோடா கிரிக்கெட் வாரியம் (Baroda Cricket Association) டிவிட்டர் செய்தியில் உறுதிபடுத்தியிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), பாண்டியா சகோதரர்களுக்கு தனது இரங்கலை டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.   

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya)தற்போது எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. க்ருனணால் பாண்டியா சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் (Syed Mushtaq Ali Trophy) பரோடா கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கிறார். அவர் தற்போது அந்த அணியின் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி விட்டதாக அந்த அணி நிர்வாகம் கூறி உள்ளது. 

ஹிமான்ஷு பாண்டியாவின் மறைவுக்கு, ரசிகர்களும், பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மகன்கள் இருவரும் இந்திய அணிக்காக விளையாடுவதை நினைத்து பெருமைப்படுவதாக சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஹிமான்ஷு பாண்டியா தெரிவித்திருந்தார்.

தனது மகன்களின் கிரிக்கெட் (cricket) கனவை நிறைவேற்ற பல தடைகளை கடந்து வந்ததாகவும், அவர்கள் தற்போது வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஹிமான்ஷு பாண்டியா கூறியிருந்தார்.

Also Read | தனது மகனின் 3 மாத பிறந்த நாளை கொண்டாடிய நடாசா ஸ்டான்கோவிக்..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News