என்ன நடக்கிறது மத்திய பிரதேசத்தில்... காங்கிரஸின் ஆட்சி நீடிக்குமா?
17 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? அதேநேரத்தில் பாஜக மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனது காய்களை நகர்த்தி வருகிறது.
மத்திய பிரதேசம்: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச அரசியலில் வெவ்வேறு வண்ணங்கள் காணப்படுகின்றன. வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான (Rajya Sabha Polls) ஒரு மூலோபாயத்தைத் திட்டமிட முதல்வர் கமல்நாத் (CM Kamal Nath), இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்திக்க சென்ற போது, அவரது அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்கள் போபாலில் இருந்து பெங்களூருக்கு ஒரு விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகு முதல்வர் கமல்நாத் (Kamal Nath) அவசர அவசரமாக டெல்லியில் இருந்து போபாலை அடைந்தார்.
அதே நேரத்தில், கோபத்தில் இருக்கும் ஜோதிராதித்யா (Jyotiraditya Scindia) நேராக டெல்லிக்கு விமானம் சென்றார். தனது காங்கிரஸ் (Congress) கட்சியை சேர்ந்தவர்கள், தங்கள் அரசுக்கு எதிராக செயல்படும் நேரத்தில், போபாலுக்கு சென்று முதல்வருடன் ஆலோசனை செய்யாமல், நேராக டெல்லி சென்றது, ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. ஜோதிராதித்யா அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தயாராகி வருகிறார் என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என சில ஆதாரங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன.
மேலும் படிக்க: மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் "ஆபரேஷன் கமல்" சக்சஸ் ஆகுமா?
பிரதமர் நரேந்திர மோடியை (PM Modi) சந்திக்க ஜோதிராதித்யாவுக்கு (Jyotiraditya Scindia) நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) ஜோதிராதித்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக காங்கிரஸ் தரப்பில் இருந்து செய்தி வந்துள்ளது. ஆனால் இந்த செய்திகள் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. 17 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா? என்பது நேரம் தான் பதில் சொல்ல வேண்டும். அதேநேரத்தில் பாஜக (BJP) மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனது காய்களை நகர்த்தி வருகிறது.