மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி தமிழகத்தில் கைது
Terrorist Arrest in Tamil Nadu: மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதியை தமிழக போலீசார் கைது செய்தனர்
மும்பை: மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்பளை செய்த தீவிரவாதி கைது செய்யப்பட்ட விஷயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம், களிரோலி மாவட்டம், தர்மராஜா அடுத்த பங்கரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டா என்கிற சீனிவாசமுல்லாகவுடு. 23 வயது இளைஞரான சேட்டா, மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் மீது போலீசில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. மும்பையில் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு சப்பளை செய்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சேட்டா என்கிற சீனிவாசமுல்லாகவுடு தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மகாராஷ்டிர மாநில போலீசார் தமிழகம் வந்தனர். பின்னர் பயங்கரவாதியின் செல்போன் எண்ணை வைத்து,அவன் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
மேலும் படிக்க | Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ
நேற்று நள்ளிரவு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி மாருதி நகரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் சேட்டா பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே மகாராஷ்டிர போலீசார் ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசமுல்லாகவுடுவை உபா சட்டத்தின் கீழ் கைது செய்ததாக தமிழக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும்: செய்தியாளர் சந்திப்பில் சையது கான் அதிரடி
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் வருகிறது.
உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சேட்டாவை மகாராஷ்டிராவிற்கு போலீசார் அழைத்து சென்றனர். பயங்கரவாதி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தின் நிலுவைத்தொகையை உயர்த்திக் காட்டும் மத்திய அரசு: அமைச்சர் செந்தில் பாலாஜி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ