தமிழகத்தின் நிலுவைத்தொகையை உயர்த்திக் காட்டும் மத்திய அரசு: அமைச்சர் செந்தில் பாலாஜி

Tamil Nadu Electricity Due 70 Crore rupees: மத்திய அரசின் மின் தொகுப்பிற்கான நிலுவைத்தொகை 70 கோடி  ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2022, 10:52 AM IST
தமிழகத்தின் நிலுவைத்தொகையை உயர்த்திக் காட்டும் மத்திய அரசு: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: தமிழகத்தில் மின்சார வழங்கல் சீராகவே உள்ளது. மின் தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்று கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மத்திய அரசின் மின் தொகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய பாக்கி 70 கோடி மட்டுமே உள்ளது அது ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கரூரில் உள்ள திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் கரூர் மாவட்ட சார்பில் மாபெரும் புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. இந்த கண்காட்சியினை தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க | Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

இந்த கண்காட்சி மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப் பகுதிகளில் அரிய வகை உயிரினமான தேவாங்கு அதிகளவில் வாழ்கின்றன.

எனவே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடவூர் மலைப்பகுதி தேவாங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை பெருமை படுத்தும் விதமாக தேவாங்கை கொண்டு நூலன், நூல் எனும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அரவக்குறிச்சி குளித்தலை கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மைய நூலகர்கள், நூலக வாசகர் வட்ட நண்பர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யலாம்: ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு

இந்த கரூர் புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும் என்றும், 115 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5000 மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாலை நேரங்களில் சாலமன் பாப்பையா, சுகி சிவம், கோபிநாத் போன்ற பேச்சாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவர்கள் வாங்கும் விலையில் புத்தக கண்காட்சி நடைபெறும். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசின் மின் தொகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய நிலுவை தொகை 70 கோடி மட்டுமே உள்ளது. அது ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும் படிக்க | பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News