மும்பையில் பரவிவரும் கோவிட் -19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை பெரிய அளவில் கொண்டாட நகர காவல்துறை தடை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவின்படி, செப்டம்பர் 10 முதல் 19 வரை CrPC இன் பிரிவு 144 தடை உத்தரவு மும்பை முழுவதும் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 


இதைத் தவிர, விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi 2021) ஊர்வலங்கள், கூட்டமாக கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது. ஒரு இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.


பக்தர்கள் விநாயகர் சிலைகளை பந்தலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரிசனங்களும் ஆன்லைக்கு மாற்றப்பட்டுள்ளன.


ALSO READ | விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடத் தடை: தமிழக அரசு


விநாயகர் சதுர்த்தி அன்று பிஎம்சி போட்ட உத்தரவு:


மும்பை சிவில் அமைப்பு, வெள்ளிக்கிழமை முதல் கணபதி விழாவிற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


புதிய உத்தரவின்படி, பொது பந்தல்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மட்டும் ஊர்வலத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நீரில் கரைக்க செல்லும் போது ஊர்வலங்களில் 10 பேருக்கு மேல் இருக்கக்கூடாது மற்றும் வீட்டில் வைத்து வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீரில் கரைக்க கொண்டு செல்லும் போது ஐந்து பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்று மும்பை மாநகராட்சி (BMC) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. 


ALSO READ | #GaneshChaturthi2020: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR