சென்னை: மக்களை பாடாய்படுத்திய கொரோனா தொற்று தற்போது மெல்ல குறைந்து வருகிறது. இந்த நிலையில்தான் மக்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இதை உறுதிப்படுத்த அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பண்டிகை காலங்களிலும், மக்கள் கூடும் நேரங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியமாகும். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா (Vinayagar Chaturthi) கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பலவித கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
- கூட்டமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி விழா நடத்தவோ, வணங்கவோ அனுமதிக்கப்படாது.
ALSO READ: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!
- தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட எந்த தடையும் இல்லை.
- அதேபோல், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- சில குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் உள்ள கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
- தங்கள் வீடுகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை தனி நபர்கள் அருகிலுள்ள ஆலயங்களில் வைக்கலாம் என்றும் அந்த சிலைகளை முறையாக கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் காவல்துறை (Chennai Police) தெரிவித்துள்ளது.
- விநாயகர் சதுர்திக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்லும்போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் (Facemask) அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ALSO READ: கூவம் ஆற்றில் மணல் கடத்தல்! கமல்ஹாசன் காட்டமான அறிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR