புதுடெல்லி: காங்கிரஸ் (Congress) தனது 135 வது நிறுவன தினத்தன்று இன்று நாடு முழுவதும் சி.ஏ.ஏ (CAA) மற்றும் என்.ஆர்.சிக்கு (NRC) எதிரான ஊர்வலத்தை ஏற்பாடு செய்து வருகிறது. லக்னோவில் அத்தகைய ஒரு அணிவகுப்புக்கு பிரியங்கா காந்தி வாத்ரா தலைமை தாங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, "தற்போது சி.ஏ.ஏ - என்.ஆர்.சி (CAA-NRC) எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.ஆர்.சி-க்கு எதிராக எந்தவித போராட்டம் இல்லை என்று மோடி அரசு கூறுகிறது. உங்களை (மோடி அரசு) இந்த நாடு கவனித்து வருகிறது. உங்கள் கோழைத்தனத்தை உணர்ந்து. உங்கள் பொய்களால் மக்கள் சலிப்படைந்து விட்டனர்.


"உ.பி. மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் அதிகம் பேசவில்லை. ஆனால் நான் சொன்னது போல், நாங்கள் பயப்படப் போவதில்லை, நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். நாம் தனியாக நடக்க வேண்டியிருந்தாலும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிட வேண்டிய நிலை வந்தாலும், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.


 



காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து பேசுகையில், "மக்கள் குரல் எழுப்பியபோது அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர். இது கோழையின் அடையாளம். உ.பி. அரசாங்கத்தையும் தாக்கிய பிரியங்கா காந்தி, தவறான திட்டங்களால் விவசாயிகள் வருத்தப்படுவதாகவும், அவர்களுக்கு யோகி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.


மும்பையிலும் கூட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள் வீதிகளில் இறங்கி என்.ஆர்.சி-சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் சென்னையில் அணிவகுப்பு நடத்தினர்.


 



இன்று (டிசம்பர் 28) காங்கிரசின் 135 வது நிறுவன நாள் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் கோடி ஏற்றி வைத்தார். 


"அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்'"என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் கொடி அணிவகுப்பை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இந்த அணிவகுப்பின் காங்கிரஸ் தலைவர்கள் அரசியலமைப்பின் முன்னுரையைப் படிபார்கள்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.