புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் எண்டிஏ கூட்டணி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நரேந்திர மோடி அவர்களும் நாடாளுமன்றத்தின் பிற அமைச்சர்களும் ஜூன் 9 ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான், நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதவியேற்பு விழாவுக்கு வரும் தலைவர்கள்


வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் ஜூன் 9 அன்று நடைபெறும் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


மாலேயில் உள்ள மாலத்தீவு அதிகாரிகள், முய்ஸு மற்றும் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மற்றும் சில தலைவர்கள் விழாவில் கலந்துகொள்வதற்காக புது தில்லிக்கு செல்வார்கள் என்பதை உறுதிப்படுத்தினர். மாலத்தீவின் ஜனாதிபதியாக முய்ஸு இந்தியா வருவது இது முதன்முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார்.


அண்டை நாடுகளுக்கு முதலிடம்


நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கான வெளிநாட்டுத் தலைவர்களின் விருந்தினர் பட்டியல் முதன்மையாக புது தில்லியின் "அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் அடிப்படையிலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் தீவு நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது. குறிப்பாக மாலத்தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் தற்போது உறவுமுறைகளில் சில சிக்கல்கள் இருக்கும் நிலையில், முய்ஸுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு உறவுகளை சீராக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகின்றது. 


சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் முய்சு மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பதவிப் பிரமாணம் செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய ராணுவ வீரர்களை தனது நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு அவர் கோரினார். 


இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே


தொலைபேசி அழைப்பும் மூலம் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபரை அழைத்ததாக இலங்கை அதிபர் விக்கிரமசிங்கவின் அலுவலக ஊடகப் பிரிவு புதன்கிழமையன்று கூறியது. அந்த அழைப்பை விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.


“இந்த உரையாடலின் போது, ​​பிரதமர் @narendramodi, ஜனாதிபதி விக்ரமசிங்கவை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்தார், அதை ஜனாதிபதி @RW_UNP ஏற்றுக்கொண்டார்,” என்று விக்கிரமசிங்கவின் அலுவலக ஊடகப் பிரிவு X இல் கூறியது.


வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா


புதன்கிழமை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடனும் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். தொலைபேசி உரையாடலில், மோடி தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஹசீனாவை அழைத்ததாகவும் அவர் அதை ஏற்றுக்கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!


இந்தியா-பூடான் கூட்டாண்மை 


பிரசாந்தா மற்றும் ஜக்நாத் ஆகியோருடன் மோடி தனித்தனியாக தொலைபேசியில் பேசியுள்ளார். வியாழன் அன்று பூடான் பிரதமர் டோப்கே மோடியை அழைத்து NDA வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். கடந்த தசாப்தத்தில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையை பிரதமர் டோப்கே பாராட்டியதாகவும், அவர் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதற்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தாகவும் கூறப்படுகின்றது. 


பிரதம மந்திரி டோப்கேக்கு அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி, பூடானுடனான முன்மாதிரியான கூட்டாண்மைக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 


இந்தியா-பூடான் கூட்டாண்மை அனைத்து மட்டங்களிலும் மிகுந்த நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. மேலும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் நெருக்கமான பொருளாதார மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மை மூலம் இந்த உறவு வலுப்படுத்தப்படுகிறது.


2014 -இல், பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த மகத்தான தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது சார்க்  (பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்) நாடுகளின் (SAARC) தலைவர்கள் கலந்து கொண்டனர்.


 2019 இல் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமரானபோது, பிம்ஸ்டெக் (BIMSTEC)நாடுகளின் தலைவர்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்,


2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், அக்கட்சி தலைமையிலான கூட்டணி 543 இடங்களில் 293 இடங்களைப் பெற்றுள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவைப்படுகின்றன. 


மேலும் படிக்க | அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை... நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ