2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பாகவே, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மோடி 3.0 அரசு அமைவதற்கு முன்பே, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். புதிய வழியில் அக்னிவீரர் திட்டத்தை பரிசீலிப்பது, பொது சிவில் சட்டம் (யுசிசி), ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பீகாரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் அமைச்சரகத்தில் பங்கேற்பது குறித்த விரிவான ஆலோசனை ஆகியவற்றில் நிதிஷ் குமார் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.
JDU செய்தித் தொடர்பாளர் KC தியாகி தெரிவித்துள்ள தகவல்
ஜேடியு செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், "அக்னிவீரன் திட்டம் குறித்து வாக்காளர்களில் ஒரு பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ள சில குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அவற்றை நீக்க வேண்டும் என எங்கள் கட்சி விரும்புகிறது... தேசிய தலைவராக முதல்வர் நிதிஷ் குமார் சட்ட கமிஷன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அனைத்து தரப்பினரும் பேசி தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
பாஜக - ஜனதளம் இடையே சில விவகாரங்களில் மாறுபட்ட நிலைப்பாடு
கே.சி. தியாகியின் அறிக்கை, ஜே.டி.யு தனது கருத்துக்களை தொடர்ச்சியாகவும், உடனடியாகவும் தொடர்ந்து முன்வைக்கும் என்பதற்கான அறிகுறியாகும். இதனுடன், சைகைகள் மூலம் பாஜகவுக்கு பதற்றம் அதிகரிக்கும் வகையிலான செய்திகளையும் கொடுத்துள்ளார். யூசிசி, அக்னிவீர், ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற விஷயங்களில் ஜேடியு எப்போதுமே மாறுபட்ட நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. இது தொடர்பாக பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்கலாம். இது தவிர, அமைச்சகங்கள் தொடர்பான ஜனதா தளத்தின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?
UCC மற்றும் அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
பிரதமர் மோடி 3.0 ஆட்சி அமைப்பதன் மூலம் அக்னிவீர் திட்டம் புதிய வழியில் சிந்திக்கப்பட வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புகிறார். இது தவிர, பொது சிவில் சட்டம் ஒரு சிக்கலான விஷயம் என்று JDU நம்புகிறது. இந்த பிரச்சினையில் ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து உள்ளது. எனவே, இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஆரம்பம் முதலே அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை இருந்து வருகிறது. சில தரப்பினர் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அதே சமயம் பல கட்சிகளும் இதற்கு ஆதரவாக இல்லை.
அக்னிவீரன் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜகவுடன் JDU கருத்து வேறுபாடு
அக்னிவீர் திட்டம் தொடர்பாக பாஜகவுடன் ஜேடியுவுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவாக இல்லை என்கிறார். இந்த திட்டத்தில் பாஜக மட்டும் உறுதியாக உள்ளது. பீகாரில் ஜே.டி.யு மற்றும் ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சியில் அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்தன. அதே சமயம், மத்திய அரசு விரும்பாவிட்டாலும், நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஜேடியுவின் மென்மையான நிலைப்பாடு
தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் நரேந்திர மோடி அரசு அமைவதற்கு முன், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிதீஷ் குமாரும் அவரது கட்சியான ஜேடியுவும் மென்மையான நிலைப்பாட்டை காட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், புதிய அரசில் மூன்று முக்கிய அமைச்சகங்களை நிதிஷ்குமார் கோருகிறார். கடந்த முறை மோடி அரசில் நிதிஷ் குமாரின் கட்சியான ஆர்சிபி சிங் கேபினட் அமைச்சராக இருந்தார். இதுதவிர, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்த பழைய பிரச்னையும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ