India News in Tamil: மத்தியப் பிரதேசம் போபாலில் பாஜகவினர் மத்தியில் இன்று (ஜூன் 27, செவ்வாய்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, "இஸ்லாத்திற்கும் முத்தலாக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. வாக்கு வங்கிக்காக பசியோடு இருப்பவர்கள் தான் முத்தலாக்கை ஆதரிக்கிறார்கள். ஒரு வீட்டை இரண்டு சட்டங்களால் நடத்த முடியாது. ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் குறித்த குழப்பத்தை பாஜக நீக்கும். பீகாரில் நடந்த பா.ஜ., அல்லாத கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் ஊழல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால், 20 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பது உறுதி என முத்தலாக், பொது சிவில் சட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து கடுமையாக சாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க பிரதமர் மோடி போபால் சென்றுள்ளார். மோதிலால் நேரு ஸ்டேடியத்தில் "எனது வாக்குசாவடி, வலிமையானது" என்ற பிரச்சாரத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் 64,100 சாவடிகளைச் சேர்ந்த 10 லட்சம் பாஜக கட்சி நிர்வாகிகள் முன் உரையாற்றினார். அப்பொழுது கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார். அதற்கு முன்னதாக போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து நாட்டிற்கு 5 புதிய வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார்.


மேலும் படிக்க - 5 சிக்ஸர்.. "வந்தே பாரத்" கலக்குதே.. நாளைக்கே "மொத்தமா" கிளம்பி வருது.. சபாஷ் பிரதமர் மோடி


முத்தலாக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது
முத்தலாக்கிற்கு ஆதரவாக யார் பேசினாலும், வக்காலத்து வாங்கினாலும் அவர்கள் வாக்கு வங்கிக்காக தான் செய்கிறார்கள். இதன்மூலம் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு பெரும் அநீதி இழைக்கிறார்கள். முத்தலாக் மூலம் ஏற்பட்டுள்ள சேதம் மிகப்பெரியது. பல ஆசைகளுடன் தந்தை தன் மகளை அவளது மாமியார் வீட்டிற்கு அனுப்புகிறார். 8-10 வருடங்கள் கழித்து மகள் திரும்பி வரும்போது, ​​அவளுடைய அண்ணன், அப்பா எல்லாரும் அவளைப் பற்றி கவலைப்பட்டு வருத்தப்படுகிறார்கள். முத்தலாக் இஸ்லாத்துடன் தொடர்புடையதாக இருந்திருந்தால், உலகின் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகள் அதை ஒழித்திருக்காது. எகிப்தில் 90%க்கும் அதிகமானோர் சுன்னி முஸ்லிம்கள். அங்கு முத்தலாக் நடைமுறை 80-90 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. முத்தலாக் என்பது இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம் என்றால், பாகிஸ்தான், இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அது ஏன் இல்லை. முஸ்லீம் மகள்கள் மீது முத்தலாக் என்ற கயிற்றை தொங்கவிடுவதன் மூலம், அவர்களை என்றென்றும் அடிமையாக வைத்துக்கொள்ளவும், துன்புறுத்துவதற்கும்  சிலர் விரும்புகிறார்கள். அதனால்தான் எனது இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் மகள்கள் பாஜக மற்றும் மோடியுடன் இருக்கிறார்கள் என்றார்.



பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் நரேந்திர மோடி கூறிது..
இன்று நாட்டில் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை தூண்டும் செயல்களில் ஈடுபடுவதை பார்க்கிறோம். ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு சட்டம், இன்னொருவருக்கு மற்றொரு சட்டம் என்றால் அந்த வீட்டை நடத்த முடியுமா? அதேபோலதான் ஒரு நாட்டை எப்படி இரண்டு சட்டங்கள் கொண்டு ஆள முடியும்? இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குடிமக்களின் சம உரிமைகளைப் பற்றி பேசுகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். வாக்கு வங்கிக்காக பொது சிவில் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சியினர் விளையாடுகின்றனர் என்றார்.


மேலும் படிக்க - ரூ.5-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை! ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு


நீங்கள் தான் பலம்- பிரதமர் மோடி
கட்சி நிர்வாகிகள் முன் பேசிய பிரதமர், 'பாஜகவின் மிகப்பெரிய பலம் நீங்கள் தான். நீங்கள் பாஜகவுக்கு மட்டுமல்ல, ஒரு கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றும் வலிமையான வீரர்கள் என்றார்.


'உத்தரவாதம்' என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது -பிரதமர் மோடி
2014 மற்றும் 2019 இன் நிலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? 2024ல் மீண்டும் பாஜகவின் மாபெரும் வெற்றி நிச்சயம். இதனால்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பீதியில் உள்ளன. இப்போதெல்லாம் 'உத்தரவாதம்' என்ற புதிய வார்த்தை மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் உத்தரவாதம் தந்துள்ளனர். 1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல், 1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், 70 ஆயிரம் கோடி காமன்வெல்த் ஊழல். ஹெலிகாப்டரில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் வரை என காங்கிரஸின் ஊழல்களுக்குப் பலியாத பகுதியே இல்லை எனக் கூறினார்.


பேரக்குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் -மோடி
பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த வாக்களிக்கும் வாக்காளர்களின் வாக்கின் பலன் என்ன என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். குடும்பம் என்ற பெயரில் வாக்கு கேட்டவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மட்டும் நல்லது செய்தார்கள். காந்தி குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் வளர்ச்சியை நீங்கள் விரும்பினால், காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். முலாயம் சிங் மகனுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் சமாஜவாதிக்கு வாக்களியுங்கள். லாலு குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டுமானால் ஆர்ஜேடிக்கு வாக்களியுங்கள். சரத் ​​பவாரின் மகளுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் என்சிபிக்கு வாக்கு அளியுங்கள். ஆனால் உங்கள் மகன்களையும் மகள்களையும் பாதுகாக்க விரும்பினால் கவனமாகக் கேளுங்கள். உங்கள் பேரக்குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் சென்று கூறுங்கள் என கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் வேண்டுகோள் வைத்தார்.


மேலும் படிக்க - 6 இஸ்லாமிய நாடுகளில் குண்டுபோட்டவர் ஒபாமா... அவரை நம்ப முடியுமா - நிர்மலா சீதாராமன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ