ரூ.5-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை! ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு

Tomato Price In India: கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி. மே மாதத்தில் கிலோ ரூ.5க்கு விற்பனையானது. ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு. தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? தக்காளி விலை குறையுமா? முழுவிவரத்தையும் பார்ப்போம்

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 26, 2023, 07:31 PM IST
  • மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.65 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
  • தக்காளி விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
  • தக்காளி புதிய விளைச்சலால் இன்னும் 1-2 மாதங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை! ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு title=

தக்காளி விலை உயர்வு: நாட்டின் பெரும்பாலான இடங்களில் தக்காளி விலை கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ ரூ.65 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன், மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ, 30 முதல் 35 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதேநேரத்தில் சில்லறை விற்பனை சந்தையில் இதன் விலை ஒரு கிலோ ரூ.40-50 ஆக இருந்தது. அதாவது, தற்போது விலை ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதிக வெப்பநிலை, குறைந்த உற்பத்தி மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தாமதமான மழைப்பொழிவு ஆகியவை அதிக விலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தக்காளி விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதாவது கடந்த 2 நாட்களில் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

சென்னையில் தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வர வேண்டிய காய்கறிகள் வழக்கத்தைவிட வரத்து குறைந்துள்ளதால், கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த வாரம் ரூ.40 விற்பனை செய்யப்பட்டது. அதேபோல தேசிய தலைநகரம் டெல்லியில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 100 வரை விற்கப்படுகிறது. மத்தியப் பிரதேச சந்தையில் தக்காளி 80 முதல் 100 ரூபாய்க்கும், உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 ரூபாய்க்கும், ராஜஸ்தானில் 90 முதல் 110 ரூபாய்க்கும், பஞ்சாபில் 60 முதல் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும் படிக்க - ஒரு பல்புக்கு ஒரு லட்சம் கரெண்ட் பில்லா? தொடரும் குளறுபடியால் மக்கள் விரக்தி!

தக்காளி விலை உயர்வுக்கு காரணங்கள் என்ன:
- பல மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி பயிர் சேதம் அடைந்துள்ளது.
- சில பகுதிகள் கடும் வெப்பத்தால் தத்தளித்து வருவதால், உற்பத்தி குறைந்துள்ளது.
- அண்டை மாநிலங்களில் இருந்து போதிய அளவில் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல இடங்களில் தக்காளி விதைப்பு குறைந்துள்ளது.
- பிற மாநிலங்களில் இருந்து தக்காளி வரவழைக்கப்படுவதால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.
- பிபார்ஜாய் புயல் காரணமாக தக்காளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
- வட மாநிலங்க்ளை பொறுத்தவரை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை தக்காளி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளன. அங்கு தான் பிபார்ஜாய் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

இன்னும் 2 மாதங்களில் தக்காளி விலை குறையலாம்
தக்காளி புதிய விளைச்சலால் இன்னும் 1-2 மாதங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, தக்காளிச் செடிகள் மூன்று மாதங்கள் ஆனவுடன், வாரம் இருமுறை தக்காளியைப் பறிக்கலாம். இந்த செடிகள் 1-2 மாத காலத்திற்கு மகசூல் தரும். இருப்பினும், இது பல்வேறு, மண் மற்றும் காலநிலை நிலைமைகளைப் பொறுத்தது என்றார். 

மேலும் படிக்க - 36 ஆண்டுகளாக வயிற்றில் இரட்டை குழந்தைகள்.. வெளியான பகீர் தகவல்!

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யும் நாடு இந்தியா:
தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் கூற்றுப்படி, சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகில் தக்காளி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சுமார் 7.89 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 20 மில்லியன் டன் தக்காளியை உற்பத்தி செய்கிறது, ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 25.05 டன் மகசூல் கிடைக்கிறது. சீனா 56 மில்லியன் டன் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலம் எவை?
நாட்டிலேயே அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலம் மத்தியப் பிரதேசம். இதற்கு அடுத்த இடத்தில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகளவு தக்காளி பயிரிடும் மாநிலங்களாக உள்ளன.

தக்காளி மட்டுமில்லை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது:
தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளும் வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ பீன்ஸ் விலை ரூ 120 முதல் ரூ. 140 வரை விற்கப்படுகிறது. சில வகையான கேரட்டின் விலை ரூ.100ஐ நெருங்கியுள்ளது. ஒரு கிலோ குடைமிளகாய் விலையும் ரூ. 80ஐ தாண்டியுள்ளது. ஒரு கிலோ பூண்டு ரூ.210 க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க - எலும்பு - மூளை - இதயத்தை பாதிக்கும் விட்டமின் D குறைபாடு... ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News