புதுடெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் (Rafael Deal) தொடர்பாக உச்சநீதிமன்றம் (Supreme Court) அளித்த தீர்ப்பை அடுத்து, காங்கிரஸ் (Congress) கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக (BJP) தரப்பில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களுடன் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad), யாருடன் கைகளில் ஊழலால் கறை படிந்ததுள்ளதோ, அவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். காங்கிரஸின் கைகள் ஊழலால் கறைபட்டுள்ளன. ரஃபேல் (Rafale) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் பாதுகாப்பிற்கான வெற்றியாகும். இந்தியாவின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி, "சத்யமேவ் ஜெயதே" (வாய்மையே வெல்லும்) எனக்கூறிய அவர், ராகுல் காந்தியும் (Rahul Gandhi) தனிப்பட்ட முறையில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையின் வெற்றி எனவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தி தனது பொய்யில் பிரான்ஸ் அதிபரையும் சேர்த்துக்கொண்டார் என மத்திய அமைச்சர் கூறினார். ராகுல் காந்தி பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை மறைத்து முழுமையற்ற கடிதத்தைக் காட்டினார். பாதுகாப்பு ஒப்பந்தங்களில் தவறுகளை செய்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இருந்த சக்தி என்ன என்பதை இந்த நாடு அறிய விரும்புகிறது.


மேலும் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "சிலரின் சிந்தனையின் அடிப்படையில் நீதிமன்றத்தின் எந்தவொரு விசாரணையும் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்திய அரசுக்கு எந்த நன்மையும் அளிக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. உண்மையையான தீர்ப்பு வழங்கியுள்ளது. ரபேல் ஏலத்தில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை எனக் கூறினார்.


உண்மையில், இன்று (வியாழக்கிழமை) ரஃபேல் ஒப்பந்தம் வழக்கில் விசாரணை கோரும் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி எஸ்.கே. கவுல் உத்தரவைப் படித்து, மறுஆய்வு மனு தகுதியற்றது என்று நீதிபதி கூறினார். டசால்ட் ஏவியேஷன் தொடர்பான ரஃபேல் வழக்கை விசாரிக்க எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரும் மனுவைவும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவமதிப்பு வழக்கையும் நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்து, ஒரு முக்கியமான அரசியல் நபராக, ராகுல் காந்தி எதிர்காலத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சி.ஜே.ஐ.ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி கே.எம். எச்சரித்தது வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.


கடந்த இரண்டு வாரங்களின் உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்புக்களை வழங்கியுள்ளது. அதாவது சமீபத்தில் பலரும் எதிர்ப்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, நேற்று கர்நாடகா தகுதி நீக்கம் எம்.எல்ஏ வழக்கு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டதின் கீழ் தலைமை நீதிபதி அலுவலம் வழக்கு குறித்து தீர்ப்பு வழங்கியது. அதனையடுத்து, இன்று சபரிமலை, ரபேல், ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு மற்றும் தெண் பெண்ணை ஆற்றில் அணை கட்டுவது குறித்த வழக்கு என 4 வழக்குகளின் தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV பாருங்கள். ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்.....