நாட்டின் மிகப்பெரிய நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைவர் மற்றும் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சம்பளம் ஏதும் வாங்கவில்லை. 2020-21 நிதியாண்டில், அவர் தனது முழு சம்பளத்தையும் கைவிட முடிவு செய்தார். இது 2021-22 நிதியாண்டிலும் தொடர்ந்தது. ரிலையன்ஸின் புதிய ஆண்டு அறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டில் முகேஷ் அம்பானியின் ஊதியம் பூஜ்ஜியமாக இருந்தது. 2020-21 நிதியாண்டிற்கான தனது சம்பளத்தை ஜூன் 2020 இல் கைவிட முடிவு செய்த அவர், 2021-22 நிதியாண்டிலும் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளிலும், அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து எந்த விதமான நிதி அலவன்ஸ்கள், முன்பங்குகள், ஓய்வூதிய பலன்கள் போன்றவற்றை தலைவர் மற்றும் எம்.டியான முகேஷ் அம்பானி வாங்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது ரிலையன்ஸ் நிறுவனத்தில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகள் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கீழ்நிலை ஊழியர்களுக்கான சம்பளம் குறைக்கப்படவில்லை.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கொரோனா பாதிப்பின்போது சம்பளம் பெற வேண்டாம் என்று முடிவு செய்தார். எனவே, 2020-21ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து முகேஷ் அம்பானி சம்பளம் பெறவில்லை.


மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் நலத்திட்டங்களுக்கு கொடுக்கப்படும் நிதி - இந்தியன் அவார்ட்ஸின் முயற்சி


இருப்பினும், அவரது உறவினர்களான நிகில் மற்றும் ஹிடல் மேஸ்வானியின் சம்பளம் ரூ.24 கோடியாக உள்ளது. இம்முறை அதில் ரூ.17.28 கோடி கமிஷன் அடங்கும். மறுபுறம், நிர்வாக இயக்குநர்கள் பிஎம்எஸ் பிரசாத் மற்றும் பவன் குமார் கபில் ஆகியோரின் சம்பளத்தில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. பிரசாத் 2021-22ல் 11.89 கோடியும், 2020-21ல் 11.99 கோடியும் பெற்றார். 2021-22ல் கபில் ரூ.4.22 கோடியும், 2020-21ல் ரூ.4.24ம் பெற்றார். 2021-22 நிதியாண்டில் செலுத்தப்பட்ட 2020-21 நிதியாண்டின் செயல்திறனுக்கான ஊக்கத்தொகைகளும் அவரகளது ஊதியத்தில் அடங்கும் என PTI அறிக்கை கூறுகிறது.


முகேஷ் அம்பானியைத் தவிர, நிறுவனத்தின் வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக உள்ள அவரது மனைவி நீத்தா அம்பானி, மீட்டிங் கட்டணமாக ரூ.5 லட்சமும், அந்த ஆண்டுக்கான இழப்பீடாக ரூ.2 கோடியும்  பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டில், மீட்டிங் கட்டணமாக ரூ.8 லட்சமும், கமிஷனாக ரூ.1.65 கோடியும் பெற்றுள்ளார்.


மேலும் படிக்க | இந்திக்கு நோ சொல்வார்கள்; இந்தி படத்தை மட்டும் விநியோகிப்பார்கள் - உதயநிதியை விமர்சிக்கும் அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ