குடிபோதையில் துறவி கைது: விஸ்கியுடன் எலுமிச்சை பழ ரசத்தை சேர்த்துக் குடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பும் புத்த மதத் துறவியின் எண்ணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட புத்த மதத்தை சேர்ந்த துறவி ஒருவர் கொடுத்த இந்த ஸ்டேட்மெண்ட் சர்வதேச அளவில் வைரலாகிறது. தாய்லாந்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக புத்த மதத்துறவி ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவர் கூறிய விளக்கம் இது.
விஸ்கியால் கோவிட்-19 ஐ தடுக்க முடியும் என்பதால், விஸ்கி அருந்தியதாக சொன்னார் ஃபிரா தனகோர்ன் என்ற 63 வயதான துறவி. தாய்லாந்தின் Muang Loez மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சந்தைக்கு மக்களிடம் நன்கொடை பெறுவதற்காக அவர் காரில் சென்றார்.
மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
காரை வேகமாக ஓட்டிச் சென்றதால், அவரது காரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அவர் குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரியவந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த போலீசார், அவரிடம் விசாரணை செய்தபோது புத்த மதத்தை சேர்ந்த துறவி கொடுத்த காரணம் விசித்திரமானடு.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு விஸ்கி நல்லது என்ற அதிர்ச்சியான தகவலைதெரிவித்த அவர், தடுப்பூசி போட்டுக் கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை.
கார் கதவில் கோவில் பெயர்
மார்க்கெட்டில் வாகனம் ஒன்று அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்ததால் ஆபத்தில் சிக்கக்கூடும் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அதன் கதவில் புத்த கோவிலின் பெயர் இருந்ததைக் கண்டார்கள்.
குடிபோதையில் துறவி
காருக்குள் அமர்ந்திருந்த அவர் குடிபோதையில் இருந்தார். எனவே போலீசார் அவரை காரை விட்டு இறங்கச் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் குடிபோதையில் இருந்தார் என்பது காரை விட்டு இறங்கியதும் தெரியவந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேச ஆரம்பித்தார். அவரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை.
மேலும் படிக்க | பீதியை கிளப்பும் Omicron BA.4, BA.5; உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை
விபத்து சாக்கு
தனது கோவிலில் மூன்று மாதங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறினார். தானும் வேறு இரு துறவிகளும் காலையில் கோவிலில் இருந்து சந்தைக்குச் செல்வதற்காக பிக்கப் ட்ரக் ஒன்றில் புறப்பட்டதாகவும், ஆனால் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
வாகனத்தின் ஓட்டுநர் காயமடைந்ததால், தாமே பிக்கப் வண்டியை ஓட்டிச் சென்றதாகவும் புத்த மதத் துறவி கூறினார்.
கொரோனாவைத் தடுக்கும் விஸ்கி
காரில் ஏறுவதற்கு முன்பு, கோவிட்-19 ஐத் தடுக்க உதவும் என்று அவர் நம்பியதால், எலுமிச்சை ரசம் கலந்த இரண்டு பெக் விஸ்கி அருந்தியதாக தெரிவித்தார். எனவே அவர் குடிபோதையில் இருந்ததை ஒப்புக்கொண்டார் என்று பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
பிறகுக், புத்த மத துறவியை சோதனைக்காக முவாங் லோஸ் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு செய்யப்பட்ட சோதனையில் அவர் அதிக அளவில் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் படிக்க | COVID-19: புனேயில் BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ