விஜயவாடா: மிகவும் விசித்திரமான தோல் புண் கொண்ட கோவிட் மல்டி சிஸ்டம் அழற்சி நோய்க்குறி (MISC) ஆந்திராவில் (Andhra Pradesh) வெளிவந்துள்ளது. கோவிட் மல்டி சிஸ்டம் அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. இது உலகின் முதல் கேஸ் என்று நம்பப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் முதல் பாதிப்பு
ஆந்திராவின் (Andhra Pradesh) புகழ்பெற்ற குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் பி.வி.ராமராவ் கூறுகையில், 'புர்புரா ஃபுல்மினன்ஸ்' என்ற சிகிச்சை முறை இந்த புதிதாக பிறந்த குழந்தைக்கு செய்யப்பட்டது. அந்த குழந்தையின் தோலில் கடுமையான காயங்கள் இருந்தன. எம்ஐஎஸ்-சி நோய் கண்டறியப்பட்ட முதல் கேஸ் இதுவாகும். பிறந்த ஏழு நாள் குழந்தை தோல் நோய் மற்றும் காய்ச்சலுடன் மே 21 அன்று ஆந்திர மருத்துவமனையின் ICU இல் அனுமதிக்கப்பட்டார்.


ALSO READ | X-Ray Setu on Whatsapp: RT-PCR வசதியற்ற இடங்களுக்கு வரமாய் வந்த கோவிட் சோதனை முறை


RT-PCR சோதனை நெகட்டிவ் என்று வந்தது
பிறந்த 16 மணி நேர குழந்தைக்கு வயிறு, மார்பு மற்றும் கால்களின் பின்புறம் கருப்பு, சிவப்பு மற்றும் நீல புண்கள் தென்பட்டது. அடுத்த மூன்று, நான்கு நாட்களில் அந்த குழந்தையின் நிலைமை மோசமடைந்தது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் போன்ற எந்தவொரு பிரச்சினையையும் தாய்க்கு ஏற்படவில்லை என்று அந்த குழந்தையின் தாயார் தெரிவித்தார். மேலும் கர்ப்ப காலத்தில் தாய் அநேகமாக அறிகுறியற்றவராக (covid asymptomatic) இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், தாய் மற்றும் குழந்தை இருவரின் RT-PCR சோதனை நெகட்டிவ் என்று வந்தது.


ஆன்டிபாடி பாசிட்டிவ்
அதேசமயம், இருவருக்கும் IGG ஆன்டிபாடி பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது. டாக்டர் பூஜாதா, டாக்டர் ரேவந்த், டாக்டர் கிருஷ்ணபிரசாத், டாக்டர் மேக்னா மற்றும் டாக்டர் பாலகிருஷ்ணா ஆகியோரின் குழு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இம்யூனோகுளோபின்கள், ஸ்டெராய்டுகள் மற்றும் ஹெப்பரின் மூலம் இரத்தத்தை மெல்லியதாக மாற்ற உதவியது, அதன் பிறகு காய்ச்சல் தணிந்து குழந்தை நன்றாக இருந்தது. ராம ராவ் தனது கண்டுபிடிப்புகளை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ இதழான லான்செட்டிற்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.


ALSO READ | COVID-19: கொப்பளித்தால் போதும், மூன்று மணி நேரத்தில் முடிவை தரும் RT-PCR பரிசோதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR