NO loudspeakers: மதுரா கிருஷ்ண ஜன்ம பூமியில் ஒலி குறையும் பஜனை
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இனிமேல் ஒலிபெருக்கியில் பஜனை இல்லை
மதுரா: மத வழிபாட்டுத் தலங்களில் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்த உத்தரப் பிரதேச அரசின் சமீபத்திய உத்தரவுகளின் அடிப்படையில், இனி மதுராவில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இனிமேல் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி அமைப்புகள் செயல்படாது.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி அமைப்புகளை அணைக்கும் முடிவு பல்வேறு தரப்பினரிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் செயலர் கபில் சர்மா கூறுகையில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் வளாகத்தில் உள்ள மிக உயரமான கோயில் கட்டிடமான பகவத் பவனில் நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகள் புதன்கிழமை (2022, ஏப்ரல் 20) முதல் அணைக்கப்பட்டுவிட்டன.
பகவத் பவன் ஆலயத்தில் உள்ள ஒலி அமைப்புகள், இனிமேல், கீர்த்தன்-பஜன் (prayer) சத்தம், கோவில் வளாகத்திற்குள்ளே இருக்கும் அளவுக்கு மிகக் குறைந்த அளவில் செயல்படும் என்று சர்மா மேலும் கூறினார்.
கட்டிடத்தின் மேல் உள்ள ஒலிபெருக்கி புதன்கிழமை அணைக்கப்பட்டது என்று கூறிய அவர், இதற்கு முன்னதாக வழக்கமாக காலையில் மங்கள ஆரத்தி தொடங்குவதில் இருந்து, அனைத்து மத நிகழ்வுகளின் போதும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | தில்லியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது தாக்குதல்; 9 பேர் கைது
ஒவ்வொருவருக்கும் அவரவர் மத சித்தாந்தத்தின்படி அவரவர் வழிபாட்டு முறையை பின்பற்ற சுதந்திரம் உள்ளது என்று கூறிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத வழிபாட்டுத்தளங்களில் ஒலி அமைப்புகளில் மிதமாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.
"மைக்குகளை பயன்படுத்த முடியும் என்றாலும், வளாகத்தில் இருந்து வரும் ஒலி, வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது," என்று அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல், மைக்குகளை பொருத்துவதற்கு, புதிதாக அனுமதி கோரும் யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
உரிய அனுமதியின்றி எந்த ஒரு மத ஊர்வலத்தையும் நடத்தக் கூடாது என்றும், அத்தகைய அனுமதிகளை வழங்குவதற்கு முன், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவது தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடமிருந்து பிரமாணப் பத்திரம் பெற வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
பாரம்பரிய மத ஊர்வலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், புதிய நிகழ்ச்சிகளுக்கு தேவையில்லாமல் அனுமதி வழங்கக் கூடாது என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் தெரிவித்திருந்தார்..
மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR