Telangana Election News In Tamil: தெலுங்கானாவில் இம்முறை ஆட்சி மாற்றம் நடக்குமா? இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. எக்சிட் போல் முடிவுகள் வந்த பிறகு, தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியை யை விட காங்கிரஸ் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. எதுவாகினும் நாளை மறுநாள் (டிசம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை) தான் தெலுங்கானா மாநிலத்தில் யாருடைய ஆட்சி என்பது தெரியவரும். எக்சிட் போல் முடிவுகளில் கவனம் செலுத்தினால், பல கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதாகக் கூறினாலும்,  மற்ற சில கணிப்புகளில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனவும் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?


கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருந்தால் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால், முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் தேர்தல் களத்தில் குதித்த காங்கிரஸ், சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்திலேயே முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியிருந்தது. இந்நிலையில் சிலரின் பெயர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க - ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அடுத்த முதல்வர் யார்? வரிசையில் 5 பேர்


கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி


சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எம்பியுமான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டியின் (Komatireddy Venkat Reddy) வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இந்த வீடியோவில், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தனக்கு முதல்வர் பதவியை சோனியா காந்தி வழங்குவார் என கூறியிருந்தார்.


யாருக்கு முதல்வர் பதவி?


கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி ஏற்கனவே முதல்வர் பதவிக்கான போட்டியில் தனது பெயரை முன் வைத்துள்ளார். ஆனால் அவரின் பெயர் மட்டுமல்ல,  மேலும் பல பெயர்களும் முதல்வர் நாற்காலியை நோக்கி வந்துக் கொண்டு இருக்கின்றன. மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர் உத்தம் ரெட்டி, காங்கிரஸ் முக்கிய தலைவர் மது யக்ஷி கவுட், தாமோதர் ராஜநரசிம்மா, முன்னாள் அமைச்சர் கே ஜனா ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் முதல்வர் பதவிக்கு வரிசையில் இருப்பவர்கள்.


மேலும் படிக்க - Telangana Exit Poll: தெலங்கானாவில் ஆட்சி யாருக்கு? மகிழ்ச்சியில் காங்கிரஸ், காத்திருக்கும் BRS


தெலுங்கானா தேர்தலில் 63.94 சதவீதம் வாக்குபதிவு


தெலுங்கானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 63.94 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முந்தைய சட்டசபையை விட, ஓட்டு சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. தேர்தல் முடிந்த நிலையில், எக்ஸிட் போல் (Telangana Exit Polls) முடிவுகளும் வெளியாகின. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், யாரும் பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையை வழங்கவில்லை. அதேநேரத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக முடிவுகள் வெளியாகின. 


மேலும் படிக்க - INDIA கூட்டணியை சாய்த்ததா பாஜக...? Exit Poll சொல்வது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ