ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அடுத்த முதல்வர் யார்? வரிசையில் 5 பேர்

Rajasthan Chunav 2023: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால், அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. முதல்வர் நாற்காலிக்கு வரிசையில் நிற்கும் அந்த 5 பெயர்கள் பற்றி பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 1, 2023, 03:05 PM IST
  • ராஜஸ்தான் பிந்தைய கருத்து கணிப்பு: பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி.
  • நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும்.
  • கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழும்.
ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அடுத்த முதல்வர் யார்? வரிசையில் 5 பேர் title=

Rajasthan Election News In Tamil: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (Rajasthan Exit Polls 2023) வெளியானது. அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை மறுநாள் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் (Rajasthan Assembly Elections Result 2023) அதிர்ச்சி அளிக்கும் என்று கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழும் அரசியல் பாரம்பரியம் உள்ளது. ஆனால் இந்த முறை இந்த பாரம்பரியத்தை மாற்ற காங்கிரஸ் முழு வீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டது மற்றும் நம்பிக்கை கொண்டுள்ளது. மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்ய முதல்வர் அசோக் கெலாட்டின் கடின உழைப்பும் தென்பட்டது. அசோக் கெலாட் மட்டுமின்றி, காங்கிரஸின் அனைத்து பிரமுகர்களும் தேர்தலுக்கு முன்பே ராஜஸ்தானை தங்கள் தளமாக மாற்றிக் கொண்டனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையை வைத்து பார்க்கும் போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டால், அக்கட்சியின் முதல்வர் முகம் யாராக இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரத்தில் இவர் தான் அடுத்த முதல்வர் என சில தலைவர்களின் பெயர்கள் தொண்டர்களிடையே விவாதிக்கப்படுகின்றன. அவர்களைப் பற்றி பார்ப்போம்.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் அரசியலின் சாணக்கியன் என்று அழைக்கப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் மூன்றாவது முறையாக முதல்வராகி உள்ளார். மீண்டும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? என்ற பேச்சும் எழுந்துள்ளது. ராஜஸ்தானை பொறுத்தவரை எத்தனை தடைகள் வந்தாலும், மாநில அரசியலில் அவர் தனது அந்தஸ்தை ஒருபோதும் சரியாய்சரிய விடவில்லை. அசோக் கெலாட் 1974-79 வரை மாநிலத் தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1979 இல் காங்கிரஸின் ஜோத்பூர் மாவட்டத் தலைவராக ஆனார். அடுத்து 1985 வரை மாநிலத் தலைவராக இருந்தார். 1980 மற்றும் 1999 க்கு இடையில், ஜோத்பூரிலிருந்து லோக்சபா எம்பியாக ஐந்து முறை கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.பி.யாக இருந்தபோது, ​​இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்மராவ் ஆகியோரின் அரசுகளில் அமைச்சராகவும் இருந்தார். 1999 ஆம் ஆண்டு, சர்தார்புரா சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அசோக் கெலாட் மீண்டும் மாநில அரசியலுக்கு வந்தார். அன்று முதல் அவர் தனது இருப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். 1998ல் முதல்முறையாகவும், 2008ல் மீண்டும் முதல்வராகவும் பதவியேற்றார். அவர் மூன்றாவது முறையாக 2018ல் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். ராஜஸ்தான் மக்களை பொறுத்தவரை அசோக் கெலாட் எப்போதும் நலத் திட்டங்களுக்கு ஒரு தேர்வாக இருந்து வருகிறார். இன்றும் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு வலுவான அடித்தளம் உள்ளது. இவருக்கு மீண்டும் முதல்வர் நாற்காலி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க - INDIA கூட்டணியை சாய்த்ததா பாஜக...? Exit Poll சொல்வது என்ன?

சச்சின் பைலட்

ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர். சச்சின் பைலட் 2018 இல் மாநிலத் தலைவராக இருந்தபோது தனது திறமையை நிரூபித்தார். 2018ல் காங்கிரஸ் வெற்றி பெற சச்சின் பைலட்டின் கடின உழைப்பு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, சச்சின் பைலட்டும் ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக கருதப்பட்டார். ஆனால் 2018 ஆம் ஆண்டு இது நடக்கவில்லை. சச்சின் பைலட் தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் மரணத்திற்குப் பிறகு ஜூன் 2000 இல் அரசியலில் நுழைந்தார்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தௌசா தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், 26 வயதில் இளம் எம்பி என்ற பெருமையும் பெற்றார். 2009 இல் அஜ்மீரில் இருந்து மீண்டும் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொறுமையை கடைபிடித்து வருகின்றனர். தங்கள் முறை வரும்வரை காத்திருக்குமாறு காங்கிரஸ் உயர்நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தமுறை இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - Election Exit Poll Results Updates: 5 மாநிலங்களில் யாருக்கு ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

கோவிந்த் சிங் தொட்டசாரா

காங்கிரஸின் முதல்வர் முகமாக கோவிந்த் சிங் தொட்டசாராவின் பெயரும் முழு வீச்சில் விவாதிக்கப்படுகிறது. கோவிந்த் சிங் NSUI-ல் இருந்து அரசியலில் நுழைந்தார். அதன் பிறகு காங்கிரஸில் இணைந்தார். அவர் 2005 இல் தனது 41 வயதில் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த 2008 சட்டமன்றத் தேர்தலில், அவர் லக்ஷ்மங்கர் தொகுதியில் வெற்றி பெற்றார். 2013 இல், வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு சில காங்கிரஸ் வேட்பாளர்களில் அவரும் ஒருவர். மாநிலங்களவையில் அவரது செயல்பாடு காரணமாக கட்சியில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியது.

இவர் எப்போதும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். 2016ல் 'சிறந்த எம்எல்ஏ' விருது பெற்றார். அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அவர் மாநிலத்தில் உள்ள ஜாட் சமூகத்தின் முக்கியக முகமாக மாறினார். பைலட்டின் கிளர்ச்சிக்குப் பிறகு, ஜூலை 2020 இல் டோட்டாசரா மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 2021 இல், கட்சியின் 'ஒரு நபர் ஒரு பதவி' விதியைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க -  ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை? கடும் போட்டி? கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

சிபி ஜோஷி

ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சிபி ஜோஷி 'பேராசிரியர்' என்றும் அழைக்கப்படுகிறார். சிபி ஜோஷி, இயற்பியலில் எம்எஸ்சி மற்றும் உளவியலில் எம்ஏ ஆகிய இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். உளவியல் துறையில் பிஎச்டி மற்றும் எல்எல்பியும் செய்துள்ளார். 1973 ஆம் ஆண்டு உதய்பூர் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டபோது தான் அரசியலில் ஜோஷியின் முதல் அறிமுகம். 1980, 1985, 1998, 2003 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நாத்வாராவிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ல் முதல்முறையாக மாநில அரசின் அமைச்சரானார்.

2009 இல், அவர் முதல் முறையாக பில்வாரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி ஆன உடனேயே மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டார். அவர் 2009 மற்றும் 2013 க்கு இடையில் பல துறைகளுக்குப் பொறுப்பேற்றார். 2019ல் சட்டசபை சபாநாயகரானார். அசோக் கெலாட் அரசின் கேபினட் அமைச்சர்களை விமர்சிப்பதில் சிபி ஜோஷி தயங்குவதில்லை. காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு முதல்வராக சிபி ஜோஷியின் பெயரும் முழு வீச்சில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க - மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இதோ கருத்துக்கணிப்பு முடிவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News