Indira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று
இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.
புதுடெல்லி: இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார்.
1966 ஜனவரி 19 ஆம் தேதியன்று, இந்திரா காநதி பதவியேற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்ல, இன்று வரை இந்தியாவின் (India) ஒரே பெண் பிரதமராக இருக்கிறார்.
ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், தனது உறுதியான நிலைப்பாட்டினால் ‘இரும்பு பெண்மணி’ (Iron lady) என்று அழைக்கப்பட்டார் இந்திரா காந்தி. மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee) இந்திராவை பற்றி குறிப்பிடும்போது, ‘துர்காதேவி’ என்று சொன்னது அவர் இரும்புப் பெண்மணி என்பதை எதிர்கட்சியினரும் ஒப்புக் கொண்டதற்கான உதாரணம் ஆகும்.
Also Read | அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல்
மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்து, பாகிஸ்தானுடன் போர் நடத்தி, வங்காளதேசம் (Bangladesh) என்ற தனி நாட்டை உருவாக்குவதற்கு காரணமானவர் இந்திரா காந்தி.
1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி (Indira Gandhi), அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார்.
இந்திரா காந்தியின் தோல்விக்குப் பிறகு ஆட்சி அமைத்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.
Also Read | பிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர்
பஞ்சாப் (Punjab) மாநிலத்தில் சீக்கியர்களின் அதிகாரம், தீவிரவாதமாக வளர்ந்தது. தீவிரவாத கனலுக்கு அண்டை நாடான பாகிஸ்தான (Pakistan) எண்ணெய் ஊற்றி வளர்த்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையும் என்பதற்கான அறிகுறிகள் உண்மையாகத் தொடங்கியபோது, இந்திரா தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க முடிவு செய்தார்.
ராணுவத்தை (Military) பஞ்சாபிற்கு அனுப்பிய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற்கோயிலுக்குள் தீவிரவாதிகளும், அவர்களின் தலைவரும் இருப்பதை ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதை அறிந்துக் கொண்டார். மத வழிபாட்டுத் தலத்திற்குள் ராணுவம் வராது என்ற உணர்வுபூர்வமான நம்பிக்கையை உடைத்து, பொற்கோயிலுக்குள் ராணுவம் செல்வதற்கு அனுமதி வழங்கினார் இந்திரா காந்தி.
Also Read | குடியரசு தின விழா அணிவகுப்பில் கம்பீரமாக இடம்பெற உள்ள ரபேல் விமானம்..!!!
பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, இந்திராகாந்தியின் மீதான சீக்கியர்களின் வெறுப்பை அதிகரித்தது. இதன் எதிரொலி, 1984 அக்டோபர் 31ஆம் நாளன்று சீக்கிய பாதுகாவல்ர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர், மதம், சமயம் என எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் உறுதியாக நடவடிக்கை எடுத்த இரும்புப் பெண்மணியின் உடலை இரும்பு குண்டுகள் துளைத்தன.
இந்த அனைத்திற்கும் அச்சாரமிட்ட நாள் ஜனவரி 19, இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்ற நாள், அது இன்று....
Also Read | Solar Fencing எவ்வாறு செயல்படுகிறது? மானியம் பெற தயாரா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR