பிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர்

புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் புதிய தலைவராக பிரதமர் மோதி நியமிக்கப்பட்டார். அமித் ஷா உட்பட 6 பேர் அறாக்கட்டளையின் அறங்காவலர்களாக உள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 10:48 PM IST
  • சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர் பிரதமர் மோடி
  • அமித் ஷா உட்பட 6 பேர் அறங்காவலர்கள்
  • டிவிட்டர் செய்தியில் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்
பிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர் title=

புதுடெல்லி: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் புதிய தலைவராக பிரதமர் மோதி நியமிக்கப்பட்டார். அமித் ஷா உட்பட 6 பேர் அறாக்கட்டளையின் அறங்காவலர்களாக உள்ளனர். 

சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவரான பிரதமரை மனதார வாழ்த்துகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோம்நாத் ஆலயத்தின் வளர்ச்சிக்கு மோடி ஜி தன்னை அர்ப்பணித்திருப்பது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 
மேலும், மோடி ஜி தலைமையில் சோம்நாத் கோயில் மேலும் சிறப்புறும், மேலும் மேம்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமித் ஷா.

குஜராத்தின் சோம்நாத் சிவன் ஆலயம் உலகப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களில் (Temple) ஒன்று. இந்து மத பாரம்பரியத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்கம் ஆலயங்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அதில், சோமநாதபுரம் கோவில் முதன்மையானது ஆகும்.

பல தசாப்தங்களாக பல முறை படையெடுப்புக்குள்ளானது. கஜினி முகமது என்றாலே சோமநாதர் ஆலயம் நினைவுக்கு வரும். பல படையெடுப்புகளால் பலமுறை சிதைவுற்றாலும், அத்தனை முறையும் புனரமைக்கப்பட்டு கம்பீரமாய் நிற்கிறது சோமநாதர் கோயில்.

தற்போதைய சோம்நாத் ஆலயமானது, 1947ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது. இந்துக்களின் 12 புனித சிவாலயங்களில் இதுவும் ஒன்று. 

Also Read | Egypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News