மத்திய பிரதேசம் : பொதுவாக போலீசில் கொலை, கொள்ளை, மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல் இதுபோன்று ஏதேனும் நடந்தால்தான் நாம் புகார் கொடுப்போம்.  அதனைத் தொடர்ந்து நாம் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரும் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவது தான் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு செயல்முறை.  ஆனால் இங்கு நடந்ததோ வேறு.  காதலியின் அழைப்பை காதலன் ஏற்காததால் அந்தப் பெண் எண் 100-க்கு அழைப்பு போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பாஜக கட்சியை சேர்தவரிடன் 50 லட்சம் மோசடி!


மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா என்கிற மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், சரணி பகுதியை சேர்ந்த ஒரு நபரை பல நாட்களாக காதலித்து வந்தார்.  இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுக்குள் ஏதோ ஒரு சண்டை ஏற்பட்டுள்ளது.  அந்த சண்டை பெரிதாக மாறியதில் அந்த நபர் அப்பெண்ணிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.  அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் பலமுறை முயற்சித்தும் இந்த நபர் அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.  அப்பெண்ணின் செல்போன் அழைப்பையும் துண்டித்து வந்துள்ளார்.  இதனால் அந்தப் பெண் மிகவும் மனமுடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.



இந்நிலையில் அவருக்கு ஒரு யோசனை தோன்றிடவே இரவு நேரத்தில் அவசர உதவி எண்ணான 100-க்கு போன் செய்துள்ளார்.  அப்போது அந்த இளம்பெண் என் காதலன் என்னுடன் பேசவில்லை நீங்கள் எப்படியாவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று போலீசாரிடம் அழுதிருக்கிறார்.  இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாது ஒருநொடி திகைத்த போலீசார் அப்பெண்ணின் அழுகுரலைக் கேட்டு உதவி செய்ய முற்பட்டனர்.


உடனே அந்த நள்ளிரவு நேரத்தில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபருக்கு போன் செய்து காவல் நிலையத்திற்கு வர வைத்தனர்.  பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர்.  பின்னர் இரு குடும்பங்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து, அவர்கள் இருவருக்கும் ஆரிய சமாஜ் கோவிலில் திருமணம் நடத்தி வைத்தனர்.


ALSO READ கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் புதைத்தாரா மனைவி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR