ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், 'விஸ்வஸ்ரூபம்' என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது. 369 அடி உயரமுள்ள இந்த சிலையானது உலகிலேயே உயரமான சிவன் சிலை ஆகும். ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது தியானம் செய்வது போல் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்துகூட பார்க்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் வண்ண ஒளிகளில் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் உள்ளே சென்று இந்த சிலையை கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க | கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நிலைமையை கண்காணிக்க விரைந்தது மத்திய குழு 


சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த சிலை அமைக்கும்பணியை ராஜஸ்தான் முலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கிவைத்தார். 


இந்நிலையில் இந்த சிலையானது முதலமைச்சர் முன்னிலையில் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இதில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த சிலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதை கழிக்கும் வகையில் சாகச சுற்றுலா வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஜெய் ஆஞ்சநேயா...! மண்டியிட்டு வேண்டி கோயில் உண்டியலை தூக்கிச்சென்ற திருடன் - வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ