மலபார் கூட்டு பயிற்சி என்பது ஒவ்வொவொரு வருடமும் நடத்தப்படும் கூட்டு பயிற்சியாகும்.  இந்த பயிற்சியை, இந்தியா, அமெரிக்கா ஜப்பான் ஆகியவை இணைந்து ஆண்டு தோறும் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் நடத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தாண்டு இறுதியில், இந்த நாடுகளின் கடற் படைகள் இணைந்து, பங்கேற்கும் மலபார் 2020 கடற்படை கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலபார் கடற்படை பயிற்சியில் பங்கேற்க ஆஸ்திரேலிய (Australia)  கடற்படைக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. QUAD வெளியுறவு அமைச்சர்கள்  டோக்கியோவில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க உறுப்பு நாடுகள் முடிவு செய்தன. இந்திய பிசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.


1992 ஆம் ஆண்டில்,  இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியான மலபார் பயிற்சி தொடங்கியது.  2015-ம் ஆண்டு இந்த கூட்டணியில் ஜப்பான் (Japan) இணைந்தது. சில காலங்களாகவே ஆஸ்திரேலியாவும் இதில் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.


2018ம் ஆண்டில்  நடந்த கூட்டுப் பயிற்சி பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்தது. இந்தாண்டின் கூட்டு பயிற்சி ஆண்டு இறுதியில் மலபார் கூட்டு பயிற்சியாக நடைபெறும்.


கடற்சார் பாதுகாப்பில், மற்ற நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியா (India) விரும்புவதால், இந்தாண்டு மலபார் கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணையும் என அமைச்சகம் வெளியிட்டு அறிக்கை தெரிவிக்கிறது.


கொரோனா (Corona) தொற்று பரவல் காரணமாக, இந்தாண்டு கூட்டு பயிற்சி, கடலில் தொடர்பில்லா முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயற்சி, பங்கு பெறும் நாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.


சீனாவிற்கான மறைமுக செய்தியாக, இந்தாண்டு மலபார் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாடுகள், கடற்சார் பாதுகாப்பையும் அதிகரிக்கும் வகையில் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிச்சயம் சீனாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் செயலாகும். 


மேலும் படிக்க | பெண்ணுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாம் அகதிக்கு ஜெர்மனி வழங்கிய தண்டனை என்ன தெரியுமா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe