பெண்ணுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாம் அகதிக்கு ஜெர்மனி வழங்கிய தண்டனை என்ன தெரியுமா..!!!

மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காண்பவர்களுக்கு ஜெர்மனியில் இடமில்லை என்று உள்ளூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 19, 2020, 02:00 PM IST
  • இஸ்லாம் அகதி ஜெர்மனியின் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார்
  • அந்த அகதி லெபனானை சேர்ந்தவர் என்பதோடு மருத்துவரும் ஆவார்.
  • அவர் பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்
பெண்ணுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாம் அகதிக்கு ஜெர்மனி வழங்கிய தண்டனை என்ன தெரியுமா..!!!

பெர்லின்: ஒரு பெண்ணுடன் கை குலுக்க மறுத்ததற்காக முஸ்லிம் அகதிக்கு (Muslim Refugee)  குடியுரிமை வழங்க ஜெர்மனி  (Germany) அரசுமறுத்துவிட்டது. மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு காண்பவர்களுக்கு ஜெர்மனியில் இடமில்லை என்று உள்ளூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

லெபனானை சேர்ந்த இந்த இஸ்லாம் அகதி ஒரு மருத்துவர் ஆவார். முதலில் லெபனான் குடிமகனாக இருந்தார், 2002 இல் ஜெர்மனிக்கு வந்து 10 ஆண்டுகள் அகதியாக இருந்த பின்னர் 2012 இல் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். தனது மதத்தில் பெண்ணிடம் கை குலுக்க அனுமதி இல்லை என்று கூறி, பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மருத்துவர் மறுத்துவிட்டார்.

ஜெர்மனியின் பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் உள்ள  நிர்வாக நீதிமன்றம், எந்தவொரு நபரும் மதம் அல்லது பாலின அடிப்படையில் யாருடனும் கைகுலுக்க மறுக்க முடியாது என்று கூறினார். நீதிமன்றம் தீர்ப்பளித்தது, " ஆண் பெண் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது,  பெண்ணை தொடுவதே ஆபத்தாக கருதும் மனப்பான்மை ஏற்கத்தக்கதல்ல".

மருத்துவர் உள்ளூர் கிளினிக்கில் மூத்த மருத்துவராக பணியாற்றுகிறார். குடியுரிமை பெறுவதற்கு, ஜெர்மனியின் அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைப்பதற்கும், பயங்கரவாதத்தை கண்டனம் செய்வதற்கும் அவர் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார். அவர் தனது அனைத்து ஆவணங்களை ஜெர்மன் அரசாங்கத்தின் பெண் அதிகாரியிடம் ஒப்படைத்தபோது, ​​இந்த நேரத்தில் அந்த அதிகாரி  மரியாதை நிமித்தமாக கை குலுக்க கையை நீட்டினார். ஆனால் மருத்துவர் கை குலுக்க மறுத்துவிட்டார். அவர் மற்ற பெண்களுடன் கைகோர்க்க மாட்டேன் என்று தனது மனைவிக்கு  வாக்குறுதி அளித்ததாக மருத்துவர் கூறுகிறார்.

ALSO READ |  Dream job alert: பிஸ்கட் சாப்பிடுவாதற்கு ஆண்டுக்கு 40 லட்சம் வரை சம்பளம்!!

 

முன்னதாக, மருத்துவரின் குடியுரிமை விண்ணப்பத்தை நிர்வாகம் நிராகரித்தது. அதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இப்போது நீதிமன்றம் ஜெர்மனியின் அரசியலமைப்பு மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாட்டை அனுமதிக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது, எனவே மருத்துவருக்கு ஜெர்மனியின் குடியுரிமை வழங்க முடியாது என கூறிவிட்டது.

ALSO READ | “தீமை அழிந்து நன்மை மலரட்டும்”... ஜோ பிடன், கமலா ஹாரிஸின்  நவராத்திரி வாழ்த்து..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

More Stories

Trending News