2016 ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னரும், திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பலர், திருப்பதி உண்டியலில் பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண மதிப்பிழக்க நடவடிக்கைக்கு, TTD-க்கு ரூ .1,000 மதிப்புள்ள 1.8 லட்சம் நோட்டுகள் (ரூ .18 கோடி) மற்றும் ரூ .500 மதிப்புள்ள 6.34 லட்சம் நோட்டுகள் (ரூ. 31.7 கோடி) மொத்தம் ரூ .49.7 கோடி பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வந்துள்ளது. பக்தர்களின் காணிக்கை என்பது அவர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதனை அழிக்கவோ, கிழிக்கவோ தயங்கிறது என அதன் தலைவர் சுப்பா ரெட்டி கூறினார். 


திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது இதற்கு பதிலாக செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுக்களை பெறவோ உதவ முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளதால், கிட்டத்தட்ட ரூ .50 கோடி மதிப்பிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது என்று  தீர்மானிக்க முடியவில்லை என தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்தார். 


ALSO READ | TTD: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது


இந்நிலையில், சனிக்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பல முக்கிய முடிவுகளை அறிவித்தது, இதில் தேவஸ்தானத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்திர ஊழியர்களாக்குதல், திருமலையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுதல் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக மின்சார பேருந்துகளை இயக்குதல் ஆகியவை அடங்கும்.


மேலும், மும்பை மற்றும் வாரணாசியில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறினார். கோவிட் -19 (COVID-19) நெருக்கடி நிலை காரணமாக, கோவில்களுக்கான நில ஒதுக்கீடு செய்யும் பணி தாமதமானது என்று குறிப்பிட்டார்.  


திருமலை திருப்பதி கோயிலுக்கு தினசரி வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 முதல் 12,000 வரை உயர்ந்துள்ளது என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  


ALSO READ | திருப்பதி அலிபிரி நடைபாதை இரு மாதங்களுக்கு மூடப்படும்: திருப்பதி தேவஸ்தானம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR