பஸ்தி: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) வியாழக்கிழமை பஸ்தி நகரத்திற்கு விஜயம் செய்தார். அங்கு சென்ற ​​முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, "​​அயோத்தி வழக்கில் (Ayodhya Case) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி தெரிவித்தார். 500 வருடமாக இருந்த அயோத்தி பிரச்சனையை வெறும் 45 நிமிடங்களில் தீர்ப்பு வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு (Supreme Court) நன்றி தெரிவிப்பதாக முதல்வர் யோகி தெரிவித்தார். இவ்வளவு பெரிய சர்ச்சையை உச்ச நீதிமன்றம் வெறும் 45 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது. இது ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சக்தியைக் காட்டுகிறது என்று முதல்வர் யோகி கூறினார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்பு, சுமார் நானூறு கோடி மதிப்பில் கட்டப்பட்ட முண்டெர்வா சர்க்கரை ஆலை தொடங்கி வைத்தார். அதனுடன் மேலும் 100 கோடி மதிப்புள்ள 100 நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் பலம் என்று கூறி, 500 ஆண்டு கால ராமர் ஜன்மபூமி சர்ச்சையை 45 நிமிடங்களில் தீர்த்து வைத்துள்ளது எனக் கூறிய, முதல்வர் யோகி, உ.பி-யின் முந்தைய மாநில அரசுகளை தாக்கி பேசினார். போலீஸ் ஆட்சேர்ப்புக்கு முந்தைய அரசாங்கங்கள் கையில் பையை வைத்துக்கொண்டு பணம் சேகரித்ததாக முதல்வர் யோகி குற்றம் சாட்டினார். ஆனால் பாஜக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை மூலம் 49 ஆயிரம் போலீஸ் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திறக்கப்பட்ட சர்க்கரை ஆலை மூலம் மக்களுக்கு வேலை கிடைக்கும். அதனால் மக்கள் வேறு இடத்திற்கு வேலை தேடி செல்லும் நிலை நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


கடந்த 70 ஆண்டுகளில் 12 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே நாட்டில் உள்ளன என்று அவர் கூறினார். 30 மாதங்களில் 14 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் 7 எய்ம்ஸையும் கட்ட பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. 


2007 முதல் 21 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பாஜக ஆட்சியில் 4 புதிய சர்க்கரை ஆலைகளை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவுவது எங்கள் திட்டம் என்று அவர் கூறினார். 


அயோத்தி ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் உச்சநீதிமன்றம், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த வழக்கு சம்பந்தமாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், சுமார் 40 நாட்களாக நடத்தி வந்தது. அந்த வழக்கின் இறுதி கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.