அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு வீடியோ கான்பரென்சிங் மூலம் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க உலகில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம்  உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


இந்த மெய் நிகர்  மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி (PM Narendra Modi), சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் , ஜப்பான் பிரதமர் யோஷிஹட் சுகா ஆகியோர் உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ( Joe Biden) அழைப்பு விடுத்துள்ளார்.


ALSO READ | ஈராக்கில் மூன்று அந்தரங்க உறுப்புகளுடன் பிறந்த குழந்தை; அதிர்ச்சியில் மருத்துவர்கள்


அமெரிக்க அதிபரின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாக, மத்திய வெளியுறவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


காலநிலை மாற்றம் குறித்த வேறுபாடுகளை களையும் முயற்சியில் அமெரிக்க காலநிலை மாற்றம் தொடர்பான பிரதிநிதியான ஜான் கெர்ரி ஏப்ரல் 1 முதல் 9 வரை அபுதாபி, புது தில்லி மற்றும் டாக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு அழைப்பு இல்லை. இது இம்ரான் கானுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை  குறைக்க, பாகிஸ்தான் பெரும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், தனக்கு அழைப்பு விடுக்கப்படாதது, பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.


இந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளில் கால நிலை மாற்றம் குறித்த மாநாட்டிற்கான முக்கிய மைல் கல்லாக, இந்த உச்சி மாநாடு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக, ஜோ பைடன்  பதவி ஏற்ற பிறகு, அமெரிக்கா, மீண்டும் பாரிஸ் உடன்படிக்கையில் இணையம் என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | சூயஸ் கால்வாய் நெருக்கடியில், சீனாவிற்கு கை கொடுத்த “Steel Camel"


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR