ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal) எவர் கிரீன் (Ever green) என்னும் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் குறுக்கே தரைதட்டி நின்றதை அடுத்து, உலக வர்த்தகம் ஸ்தப்பித்து போனது.
23ம் தேதி சிக்கிக் கொண்ட இந்த கப்பல், சுமார் 6 நாள் கடுமையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பிறகு நேற்று, மிதக்க தொடங்கியது.
சூயஸ் கால்வாய் (Suez Canal) நெருக்கடி, பல நாடுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. பல நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான சரக்கு போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. காரணம் சீனாவின் “Steel Camel”. இதன் மூலம் பல சீன நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கான ஆர்டர்களை சரியான நேரத்தில் வழங்க முடிந்தது.
கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்ட பின், சீனாவின் (China) பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக சீன நிறுவனங்களுக்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெரிய அளவில் மின்னணு பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரையிலான ஆர்டர்கள் கிடைத்துள்ளது. சூயஸ் கால்வாய் நெருக்கடி காரணமாக, கடல் போக்குவரத்த பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சீனா சரக்கு ரயில்கள் மூலம் ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவிற்கு பொருட்களை அனுப்பத் தொடங்கியது. சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அமைக்கப்பட்ட ரயில் தடங்களில் 2000திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்குகின்றன.
ALSO READ | In Pics: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்
இந்த ரயில் பாதை பாலைவன பகுதி வழியாக நீண்ட தூரம் கடந்து செல்கிறது. எனவே இந்த ரயில்களை எஃகு ஒட்டகம், அதாவது 'Steel Camel' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே சீன நிறுவனங்கள் ரயில் மூலம் தான் முக்கியமாக சரக்குகளை ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் 2020 நடுப்பகுதியில் இருந்து, கடல் போக்குவரத்து செலவு கடுமையாக அதிகரித்தது. மேலும் அதிக நேரம் எடுத்தது. ரயில்கள் மூலம் அனுப்பும் சரக்குகள், கப்பலை விட விரைவாக சென்றடைவதோடு, செலவும் குறைவு.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, சீனா ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியது. கடந்த ஆண்டு, சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது. ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் போதிலும், இன்னும் கடல் வழி போக்குவரத்து சில இடங்களில் பிரதானமாக உள்ளது. உதாரணமாக, ஷாங்காய் அருகே உள்ள யாங்ஷான் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 20 அடி கொண்ட 20 லட்சம் கொள்கலன்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரயில் மூலம் செல்லும் கொள்கலன்களின் எண்ணிக்கை 2,09,000 மட்டுமே. ஆனால் ரயில்வே ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சூயஸ் கால்வாயில் எழுந்த நெருக்கடி இந்த பாதையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
இந்த ரயில் பாதை சீனாவின் பெல்ட் மற்றும் சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் 2013 இல் தொடங்கப்பட்டபோது, இரயில் பாதை தேவையா என பெரிய அளவில் விவாதம் நடந்தது.
ALSO READ | சூயஸ் கால்வாய் ட்ராபிக் ஜாம் எப்போது அகலும்; அதிகாரிகள் கூறுவது என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR