பிரதமர் மோடியை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசினார் கமலா ஹாரிஸ்
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தடுப்பூசியை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி: அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை (ஜூன் 3) தொலைபேசியில் பேசினார். இந்த தொலைபேசி அழைப்பிற்கு அமெரிக்க தரப்பினரின் வேண்டுகோள் விடுத்ததாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. தொலைபேசி உரையாடலின் போது, ஜூன் மாதத்திற்குள் அமெரிக்கா, இந்தியா உடனும் மற்ற நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என்று ஹாரிஸ் தெரிவித்தார்.
உரையாடலின் போது, இந்தியா-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார் என்று ANI செய்தி வெளியிட்டுள்ளது.உரையாடலின் போது, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் (Kamala Harris) ஆதரவு, அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய புவம்சாவளியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
"உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான அமெரிக்க உத்தியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான அமெரிக்காவின் உத்தரவாதத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். தடுப்பூசி தொடர்பாக, இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்," என்று பிரதமர் கூறினார்.
"பிடென்-ஹாரிஸ் நிர்வாகம் முதலில் 2.5 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கத் தொடங்கும் என துணை அதிபர் அறிவித்தார்" என அமெரிக்க அரசு கூறியுள்ளது ஜூன் மாத இறுதிக்குள் வாஷிங்டன் உலகளவில் 8 கோடி தடுப்பூசிகளை வழங்கவுள்ளது.
அமெரிக்க நிர்வாகம் 2.5 கோடி COVID-19 டோஸ்களை வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தது, அவற்றில் பெரும்பாலானவை உலக சுகாதார அமைப்பிம் (WHO) கோவாக்ஸ் முயற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருகனடா, மெக்ஸிகோ மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 60 லட்சம் டோஸ்களை மட்டுமே வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ALSO READ | Israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நாற்காலியை அசைத்து பார்க்கும் பென்னட்..!!
அமெரிக்க அதிபர் பிடன் (Joe Biden) ஒரு அறிக்கையில், " தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கனடா, மெக்ஸிகோ, இந்தியா மற்றும் கொரியா குடியரசு உள்ளிட்ட பிற நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு 60 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும்" என்று கூறினார்.
"முதலில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். இந்த தடுப்பூசிகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன் கண பணியாளர்களுக்கும் வழங்கப்படும், அவை நேரடியாக பகிரப்படும்," என்று அவர் கூறினார்.
இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகள் ஆகியவை கோவாக்ஸ் திட்டம் மூலம் அமெரிக்க தடுப்பூசிகளைப் பெறும் நாடுகள்.
ALSO READ | மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவது எப்போது; அரசு கூறுவது என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR