வாஷிங்டன்: இது இந்தியாவில் புத்தாண்டுகளின் தருணம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சமூகத்தினர் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் நேரம் இது. நாட்டின் பல இடங்களில் நவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய ஆண்டை ஆசிய துணைக்கண்டத்தில் பலர் துவங்கும் இந்த நல்ல நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனைவருக்கும் புத்தாண்டுக்கான தனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு, உகாதி, பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
"இந்த வாரம் பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் மற்றும் புத்தாண்டின் துவக்கத்தைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு ஜில் மற்றும் நான் எங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெங்காலி, கம்போடியன், லாவோ, மியான்மரீஸ், நேபாளி, சிங்கள, தமிழ், தாய், மற்றும் விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள் " என்று பைடன் ட்வீட் செய்துள்ளார்.
Jill and I send our warmest wishes to the South Asian and Southeast Asian communities who are celebrating Vaisakhi, Navratri, Songkran, and the incoming New Year this week. Happy Bengali, Cambodian, Lao, Myanmarese, Nepali, Sinhalese, Tamil, Thai, and Vishu New Year!
— President Biden (@POTUS) April 13, 2021
அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் பொறுத்தவரை, இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளியினரின் முக்கியத்துவத்தை அவர் நன்கு புரிந்துகொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்தியாவில் அவரது கிராம மக்கள் அதைக் கொண்டாடிய விதம் பற்றி உலகமே பேசியது.
ALSO READ: Tamil New Year Panchangam: பிலவ பஞ்சாங்கம் கணிப்பு; இன்றைய பஞ்சாங்கம் 14 ஏப்ரல் 2021!
இந்தியாவில், ஆண்டின் இந்த நேரம் கோடைக்காலத்தின் துவக்கத்தையும் வசந்த காலத்தையும் குறிக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பருவமும் புத்தாண்டின் (New Year) துவக்கமும் பல்வெறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. தமிழகதில் சித்திரைத் திருநாள், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உகாதித் திருநாள், மேற்கு வங்கத்தில் நப பர்ஷா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் புத்தாண்டின் வருகை கொண்டாடப்படுகின்றது.
வசந்த காலத்தில் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழா, சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் வசந்த நவராத்திரி ஏப்ரல் 13 ஏப்ரல் 22 வரை கொண்டாடப்படவுள்ளது. நவதுர்கா என்றழைக்கப்படும் துர்கை அம்மனின் ஒன்பது வடிவங்கள் இந்த நவராத்திரியில் வழிபடப்படுகின்றன.
ALSO READ: Tamil New year Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 14 ஏப்ரல் 2021 - தமிழ் வருட பிறப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR