புதுடெல்லி: காங்கிரஸ் (Congress) கட்சி தனது 135 வது நிறுவன நாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் CAA மற்றும் NRC -க்கு எதிராக ஊர்வலத்தை ஏற்பாடு செய்து உள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து பேரணி நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்தில் சி.ஏ.ஏ (CAA) மற்றும் என்.ஆர்.சிக்கு (NRC) எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு பேசிய முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "அசாமை நாக்பூரிலிருந்து இயக்க அனுமதிக்க மாட்டார். அசாம் மாநிலத்தை அசாம் மக்களால் நடத்தப்படும்: 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பேசிய அவர், "பாஜக எங்கு சென்றாலும் அது வெறுப்பை பரப்புகிறது. அசாமில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களை ஏன் கொல்கிறீர்கள்? மக்களின் குரலை பாஜக கேட்க விரும்பவில்லை. மக்களின் குரலுக்கு பயந்து, அவர்களை நசுக்குகிறது. இளைஞர்களைக் கொல்ல விரும்புகிறது என மத்திய அரசை கடுமையாக சாடினார். 


 



ஆனால் அசாம் மக்கள் வெறுப்புடன் செயல் மாட்டார்கள். கோபத்துடன் போராட மாட்டார்கள். அவர்கள் அன்போடு போராட்டத்தை தொடருவார்கள்" என்றார். 


முன்னதாக இன்று காலை, லக்னோவில் நடைபெற்ற பேரணிக்கு தலைமை தாங்கிய பிரியங்கா காந்தி வாத்ரா, "இன்று சி.ஏ.ஏ - என்.ஆர்.சி (CAA-NRC) சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது. ஆனால் என்.ஆர்.சி-க்கு எதிராக எந்தவித போராட்டம் இல்லை என்று மோடி அரசு கூறுகிறது. உங்களை (மோடி அரசு) இந்த நாடு கவனித்து வருகிறது. உங்கள் கோழைத்தனத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். மக்கள் குரல் எழுப்பியபோது அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர். இது கோழையின் அடையாளம் எனக் கூறினார். 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.