India Alliance Vs Congress: 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அரையிறுதிப் போட்டிகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் முக்கியமானவை. இந்த முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வந்தால், பொதுத் தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது நிதர்சனம். ஆனால், தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக வந்தால், இந்தியா கூட்டணியின் பலம் வெறும் காகிதப் பக்கங்களுக்கு மட்டுமே என்று காட்ட ஆளும் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் முக்கியமானது


இந்தியா கூட்டணிக்கு இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏன் முக்கியம்? அதற்கு முன் நான்கு மாநிலங்களின் அரசியல் மற்றும் ஆட்சியை பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். தற்போது சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும், தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சியும் உள்ளது. 2024 மக்களவை தேர்தலின் போது லோக்சபா தொகுதிகளில் இந்தியா கூட்டணி அல்லது என்டிஏ கூட்டணி யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகும். கர்நாடகாவில் மே மாதம் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியதும், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் வெற்றியை காங்கிரசு பார்க்கிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்கும் நம்பிக்கையில் உள்ளது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், எதிர்க்கட்சிக் கூட்டணியான 'இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் (I.N.D.I.A.) கட்சியின் நிலையை வலுப்படுத்தும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு போட்டியாக, இந்திய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


விரைவில் பரபரப்பான அரசியல் ஆரம்பம்


தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை எதிர்கட்சிகள் இப்போது முடுக்கிவிட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகள் சீட் பங்கீடு குறித்து முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருந்தன. ஆனால் காங்கிரஸ் தரப்பில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக லோக்சபா சீட் பங்கீடு பற்றி பேசுவதை விரும்பவில்லை. தேர்தல் முடிவுகள் வரும் வரை சீட் பங்கீடு பேச்சுவாரத்தை ஒத்திவைக்கப்பட்டது. ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சீட் பங்கீட்டில் அதிக பேரம் பேச காங்கிரஸின் திட்டமிட்ட முயற்சி இது என்றும், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்தவுடன், கருத்து வேறுபாடுகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. 2024ல் பிஜேபியை தோற்கடிக்க அனைவரும் பிராந்திய கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரசை மையமாகக் கொண்டு பரபரப்பான அரசியல் விரைவில் தொடங்கும்.


மேலும் படிக்க - முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?


லோக்சபா சீட் பங்கீடு அவரசம் வேண்டாம்- காங்கிரஸ்


பாஜகவை தோற்கடிக்க இந்திய கூட்டணியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து, கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு முன்னேற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தினர். கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டணியின் கடைசி கூட்டத்தில், பிராந்திய கட்சிகளுக்கு இடையே சீட் பங்கீடு குறித்து முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கட்சிக்குள் விவாதித்ததையடுத்து, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.


ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரசுக்கு பலன் கிடைக்குமா? 


செப்டம்பரில் ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்றும், சீட் பங்கீடு குறித்து மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை செய்வதில் காங்கிரஸ் அவசரப்படக் கூடாது என்று பல தலைவர்கள் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வலுவான நிலையில் இருந்து சீட் பங்கீடு குறித்து பேச்சு நடத்த வேண்டும். இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரசுக்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் அக்கட்சி முன்னிலை பெறும் என்றும், மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.


மேலும் படிக்க - தெலங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் உற்சாகம்! பிஆர்எஸ் அமைதி, பாஜக லிஸ்ட்லயே இல்லை


இந்தியா கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக மட்டும் -காங்கிரஸ்


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 26 கட்சி இணைந்த எதிர்க்கட்சி கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே என திட்டவட்டமாக உள்ளனர். ஆனால், மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போது, ​​தொகுதி பங்கீட்டில் மாநில கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாக இந்தியா கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் சற்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி நிலவுவதாகவும், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சிக்கு எதிரான முக்கிய போட்டியாக காங்கிரஸ் இருப்பதாக, அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 


பாஜகவை வெல்ல ஒரே மேடையில் திரண்ட எதிர்க்கட்சிகள்


பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் திரண்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு பேரம் பேச வாய்ப்பளிக்கும் என்பதும் உண்மை. இந்த நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்றால், 2024 பொதுத் தேர்தலுக்கு பிராந்தியக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் வெற்றி பெறலாம் என்பது வெளிப்படையானது. ஆனால், அதன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக முடிவுகள் வந்தால், இந்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸின் அழுத்தத்திற்கு அடிபணியாது என்பதும் உண்மை. 


மேலும் படிக்க - 4 மாநில தேர்தல் முடிவுகள்: வட மாநிலங்களில் சரிவை சந்திக்கும் பாஜக?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ