4 மாநில தேர்தல் முடிவுகள்: வட மாநிலங்களில் சரிவை சந்திக்கும் பாஜக?

4 States Election results: தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.    

Written by - RK Spark | Last Updated : Dec 3, 2023, 09:23 AM IST
  • இன்று நடைபெறும் வாக்குப்பதிவு.
  • பாஜக - காங்கிரஸ் இடையே கடும் மோதல்.
  • யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
4 மாநில தேர்தல் முடிவுகள்: வட மாநிலங்களில் சரிவை சந்திக்கும் பாஜக? title=

4 States Election results: தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு 2024 மக்களவை தேர்தலின் ஒரு முன்னோடியாக இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் பார்க்கப்படுகிறது.  பாஜகவும் காங்கிரஸும் ஆட்சியை பிடிக்க கடும் போராட்டத்தில் இறங்கி உள்ளன.  மிசோரமின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மிசோரம் மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள நான்கு மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும் தற்போது ஆட்சியில் உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆட்சியில் உள்ளது. 

மேலும் படிக்க | Chhattisgarh Assembly Election Result 2023: யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? முக்கியமான 10 முகங்கள்

 

நான்கு மாநில தேர்தல் கருத்து கணிப்புகள்:

மத்திய பிரதேசம்

2018ல் ஆட்சிக்கு வந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக கடந்த 2020ல் ஆட்சிக்கு வந்தது. கருத்துக் கண்புகளில் காங்கிரசை விட பாஜகவின் கை ஓங்கி உள்ளது. 230 இடங்களைக் கொண்ட மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் நிறைய ஆபத்து உள்ளது. தற்போதைய கருத்து கணிப்பு முடிவுகளை அகற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று கமல்நாத் கூறி வருகிறார்.  மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில் பாஜக 140-162 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும். காங்கிரஸ் 60-90 இடங்களைப் பெறலாம் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.  அதே நேரத்தில் பிஜேபி மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் சுயேட்சைகளை அணுகத் தொடங்கியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), பாரத் ஆதிவாசி கட்சி (பிஏபி), பாரதிய பழங்குடியினர் கட்சி (பிடிபி), ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி), சிபிஐ (எம்) ஆகிய கட்சிகள் அங்கு தேர்தலில் போட்டியிடுகின்றன. கருத்துக்கணிப்பு படி 199 சட்ட மன்ற தொகுதிகளில் பாஜக 80-100 இடங்களும், காங்கிரஸுக்கு 86-106 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர்

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்பின் படி மொத்தம் உள்ள 90 இடங்களில் காங்கிரஸுக்கு 40-50 இடங்களும், பாஜகவுக்கு 36-46 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

தெலுங்கானா

தெலுங்கானாவில் வெளியான கருத்துக்கணிப்புகளின் படி கே.சி.ஆரின் நம்பிக்கையை தகர்த்து காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. 119 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸுக்கு 63-73 இடங்களும், பிஆர்எஸ்-க்கு 34-44 இடங்களும், பாஜகவுக்கு 4-8 இடங்களும் கிடைக்கும் என்று கருது கணிப்பு கூறுகிறது. 

மேலும் படிக்க | Madhya Pradesh Election Results 2023 Live: ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா பாஜக?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News